கிருஷ்ணகிரி மாவட்ட
விளையாட்டு அரங்க வளாகத்தில்,
14 -வது ஜூனியர்
உலகக்கோப்பை ஹாக்கி
போட்டிக்கான கோப்பையினை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை
ஆகியோர் வரவேற்று
அறிமுகம் செய்து வைத்தனர்.
கரகாட்டம்,
மயிலாட்டம்,
ஒயிலாட்டம்,
பொய்க்கால் குதிரை,
பரதநாட்டியம் மற்றும்
பாரம்பரிய இசை
கலைநிகழ்ச்சிகளுடன்
14 வது உலக்கோப்பை போட்டிக்கான
TROPHY TOUR கோப்பை
வரவேற்கப்பட்டது
--- மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. நவ. 23. -
கிருஷ்ணகிரி மாவட்ட
விளையாட்டு அரங்க வளாகத்தில்,
14 - வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி
போட்டிக்கான கோப்பையினை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
கிருஷ்ணகிரி மாவட்ட ஹாக்கி யுனிட் தலைவர்
திரு.தே.மதியழகன்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை,
ஆகியோர் இன்று (23.11.2025) ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் வரவேற்று அறிமுகம் செய்து வைத்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில்
21 வயதுக்கு உட்பட்டோருக்கான
14 வது சர்வதேச அளவிலான
உலக கோப்பை ஹாக்கி போட்டி
நடைபெற உள்ளது.
இப்போட்டிகள் சென்னை மற்றும் மதுரை ஆகிய
இடங்களில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை
சிறப்பாக நடைபெற உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
இந்த போட்டிகளில் 24 நாடுகளின் அணிகள்
பங்கேற்கின்றன.
அரையிறுதி போட்டிகள்
மற்றும்
இறுதி சுற்று
சென்னையில் டிசம்பர் 9, 10 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
உலக கோப்பையை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் வழங்குகிறார்.
எப்ஐஎச் ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான
கோப்பையானது மாணவ, மாணவியர்கள்,
இளைஞர்களிடையே விழிப்புணர்வு மற்றும்
விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்
எடுத்துச் செல்லப்படுகிறது.
இதற்கென சிறப்பு சுற்றுலா பஸ் ஏற்பாடு
செய்யப்பட்டு தருமபுரி மாவட்டத்தில் இருந்து
34 வது மாவட்டமாக கிருஷ்ணகிரிக்கு வந்த
கோப்பையினை கிருஷ்ணகிரி ராயக்கோட்டை
மேம்பாலம் அருகில்
கரகாட்டம்,
மயிலாட்டம்,
பொய்க்கால் குதிரை,
சிலம்பாட்டம்,
கோலாட்டம்,
தெருக்கூத்து கலைஞர்கள்,
அரசு இசைப்பள்ளி கலைஞர்களின்
கலை நிகழ்ச்சிகள்,
பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை,
புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சி,
மற்றும்
பர்கூர் கண்கார்டியா பள்ளி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,
பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவ மாணவியர்கள்,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய
விடுதி மாணவ மாணவியர்கள்,
என 1000 மேற்பட்ட மாணவ மாணவியர்களுடன்
14 வது உலக்கோப்பை போட்டிக்கான
TROPHY TOUR கோப்பை வரவேற்கப்பட்டது.
என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் (பொ)
திரு.நடராஜமுருகன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.உமாசங்கர்,
கிருஷ்ணகிரி மாவட்ட ஹாக்கி யூனிட்
துணை தலைவர்கள்
திரு.இளங்கோ,
திரு.குமரன்,
செயலாளர்
திரு.ஞானசேகரன்,
துணை செயலாளர்
திரு.மார்கண்டன்,
பொருளாளர்
திரு.தமிழ்வாணன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
திரு.சு.மோகன்,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர்கள்,
அலுவலக பணியாளர்கள்,
மாணவ, மாணவியர்கள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------.