கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
விடுப்பு எடுக்காமல்
100% பள்ளிக்கு வருகை தந்த
மாணவர்களுக்கு
பாராட்டு விழா
ஓசூர். ஏப்ரல். 17. –
மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி
ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு
பாராட்டு விழா
நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பேடரப்பள்ளி 3 -வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
இயங்கி வருகிறது.
பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளி
மாவட்டத்திலேயே சிறந்த அரசுப்பள்ளியாக திகழ்கிறது.
இந்தப் பள்ளியில் 895 மாணவ மாணவிகள் தமிழ் மட்டும் ஆங்கில மொழியில் கல்வி பயின்று வருகிறார்கள்.
தரமான கல்வி
இங்கு ஒரு தலைமையாசிரியர்
மற்றும் 20-க்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் மூலமாக
மாணவர்களுக்கு
நல்லொழுக்கத்துடன்
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
2024 – 25-ம் கல்வி ஆண்டு இந்த ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டில்
நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று
(17-04-25) கடைசி தேர்வு
மற்றும் கடைசி வேலை
நாள் ஆகும்.
100 சதவீதம் வருகை
ஆகையால் 100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் அனைத்து (199) நாட்களும் பள்ளிக்கு வருகை தந்த சிறந்த மாணவ, மாணவிகளான…
நான்காம் வகுப்பு
சர்ஜன், வருண் ஆதித்யா மற்றும் பிந்துஸ்ரீ
5-வது வகுப்பு
விஷ்ணு மணி
ஆகிய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பாராட்டு விழா
இந்த நிகழ்வில்
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்
தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக
மாமன்ற உறுப்பினர்
திரு. ரஜினிகாந்த்
கலந்து கொண்டு
பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தலைமையாசிரியர்
பொன் நாகேஷ்,
பள்ளிக்கு விடுப்பு வருகை தந்த
மாணவ, மாணவிகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
இந்த விழாவில்
பெற்றோர் ஆசிரியர்
கழகத் தலைவர்
திரு.லக்கப்பா,
வெங்கடேஷ் பாபு,
ஓசூர் ஆசிரியர் பயிற்றுநர்
திருமதி. ஹேமலதா,
ஆசிரியர்கள் சுஜாதா, நந்தினி, சாந்தி பாய், மற்றும் ரம்யாதேவி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.