ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
Hosur News 021
Editor - Jothi Ravisugumar,M.A.
Hosur News 021
Editor - Jothi Ravisugumar,M.A.
ஊத்தங்கரையில் மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரண உதவிகளை வழங்கிய
எம்.பி. கோபிநாத்
ஓசூர். டிச. 04. –
கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கோபிநாத்
ஊத்தங்கரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களவை உறுப்பினர் கோபிநாத் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியின்
சார்பில் மக்களவை உறுப்பினர் கோபிநாத், நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏகாம்பவாணன், மாநில செயலாளர் ஜெ.எஸ்.ஆறுமுகம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்
ஜெ.என். குமரேசன், வட்டாரத் தலைவர்கள்
திருமால், அயோத்தி, ரவி மற்றும் பலர் உடனிருந்தனர்.