ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
மற்றும்
ஓசூர் ஹில்ஸ் அரிமா சங்கம்
இணைந்து நடத்திய
மாபெரும் ரத்ததானம் முகாம்
100 யூனிட் ரத்தம் தானமாக வழங்கிய
தொழிலாளர்கள்
ஓசூர் சிப்காட் அரிமா சங்க
ரத்த வங்கி மருத்துவ குழு பங்கேற்பு
ஓசூர். பிப்ரவரி, 1. –
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் மற்றும்
ஓசூர் ஹில்ஸ் அரிமா சங்கம் இணைந்து
நடத்திய மாபெரும் ரத்த தானம் முகாமில்
சிப்காட் – 2 தொழிற்பேட்டையில் உள்ள
Essae Gears & Transmissions Pvt
என்ற தனியார் நிறுவனத்தில்
பணியாற்றும் தொழிலாளர்கள்,
100 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மேக்னம் அரிமா சங்கம் மற்றும் ஹில்ஸ் அரிமா சங்கம் ஆகிய அரிமா சங்கங்கள் இயங்கி வருகிறது.
இந்த சங்கங்களின் சார்பில், அரசுப்பள்ளி,
அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான உபகரணங்களை வழங்குவது,
ரத்த தானம் முகாம்கள், இலவச கண் சிகிச்சை
மருத்துவ முகாம்கள் நடத்துவது
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட
உதவிகள் செய்யும் சமூக சேவை
பணியில் தொடர்ச்சியாக
ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஓசூர் சிப்காட் – 2
தொழிற்பேட்டையில் இயங்கி வரும்
Essae Gears & Transmissions Pvt
தனியார் நிறுவனத்தில் மாபெரும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
பிப்ரவரி 1-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை
நடந்த இந்த முகாமை
Essae Gears & Transmissions Pvt
தொழிற்சாலையின்
துணைத் தலைவர்
அரிமா. குபேந்திரன்
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இதில் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. கே. மகேந்திரன்,
ஓசூர் ஹில்ஸ் அரிமா சங்க தலைவர்
அரிமா. சி.கருப்பண்ணன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ரத்த தானம் முகாமுக்கு
ஓசூர் ஹில்ஸ் அரிமா சங்க
முன்னாள் தலைவர்
அரிமா. கமலக்கண்ணன்,
வருகை தந்து பார்வையிட்டார்.
அரிமா சங்க ரத்த வங்கி
இந்த ரத்த தானம் முகாமில் ஓசூர் சிப்காட்அரிமா சங்க ரத்த வங்கி மருத்துவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்று,
ரத்த தானம் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
100 யூனிட் ரத்தம் தானம்
ரத்த தானம் வழங்குபவர்களின்
உடலின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டு, ரத்த தானம் பெறப்பட்டது.
இதில் Essae Gears & Transmissions Pvt
நிறுவனத்தில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள், பங்கேற்று ஆர்வத்துடன் ரத்த தானம் வழங்கினர்.
இந்த முகாமில் மொத்தம் 100 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஆப்பிள், வாழைப்பழம், பிஸ்கெட், பழரசம்
ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த மாபெரும் ரத்த தானம் முகாமில்
Essae Gears & Transmissions Pvt
நிறுவன, H.R.
நீலகண்ட ராவ்,
அதிகாரி கார்த்திகேயன்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா என்.கண்ணன்,
செயலாளர்(செயல் திட்டம்)
அரிமா ஆர். ரவிசங்கர்,
பொருளாளர்
அரிமா பி. மாதேஷ்குமார்
ரத்த தானம் முகாம் தலைவர்
அரிமா ஏ.சரவணன்,
ஓசூர் ஹில்ஸ் அரிமா சங்க
செயலாளர்( நிர்வாகம்)
அரிமா குரேந்திர பிரசாத்,
செயலாளர்(செயல் திட்டம்)
அரிமா டி.பைரப்பா,
பொருளாளர்
அரிமா எம்.சுரேஷ்.
ஓசூர் ஹில்ஸ் அரிமா சங்க
ரத்த தானம் முகாம் தலைவர்
அரிமா ஏ.தனசேகர்.
ஆகியோர் பங்கேற்றனர்.