புகையில்லா போகி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
போகி மற்றும் பொங்கல்
திருநாளை முன்னிட்டு
மாணவர்களிடையே
புகையில்லா போகி
பண்டிகையை கொண்டாட
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
புகையில்லா போகி
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஓசூர், முல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள
அரசு மேல் நிலைப் பள்ளியில்
போகி மற்றும் பொங்கல்
திருநாளை முன்னிட்டு
மாணவர்களிடையே
புகையில்லா போகி பண்டிகையை
கொண்டாடவும்,
ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியும்
நெகிழிப் பொருட்கள்
பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும்,
சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை பயன்பாட்டினை ஊக்குவிக்கவும்
பள்ளி தலைமையாசிரியை
அவர்களின் ஒருங்கிணைப்போடு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்
சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி
12.01.2026 அன்று நடத்தப்பட்டது.
மேலும்,
மாணவர்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த
Reduce,
Reuse,
Recycle
எனும் தலைப்பில்
திட்டமாதிரிகள் உருவாக்குதல்,
வரைபடங்கள் வரைதல்
ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
திரு. முத்துராஜ்.
முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை
திருமதி. வளர்மதி
மற்றும் ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.
--------------------------------------.