ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
Denkanikottai News 001
News Editor - Jothi Ravisugumar.M.A.
Denkanikottai News 001
News Editor - Jothi Ravisugumar.M.A.
தேன்கனிக்கோட்டையில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் விளக்க பேரணி மற்றும்
பொதுக்கூட்டம்
மாநிலச் செயலாளர்
கே. பாலகிருஷ்ணன்
பங்கேற்பு
ஓசூர். டிச. 22. –
பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
தேன்கனிக்கோட்டையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை
பழைய பேருந்து நிலையத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் விளக்க பேரணி மற்றும்
பொதுக்கூட்டம் நடைபெற்றது.
செங்கொடி பேரணி
தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில்
இருந்து காலை 10 மணிக்கு பேரணி புறப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க சென்ற இந்த செங்கொடி பேரணி,
தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலை, மகாத்மா காந்தி சாலை, உள்ளிட்ட
நகரின் பிரதான வீதிகளில் பயணித்து
இறுதியில் பழைய பேருந்து நிலையத்தில்
நிறைவடைந்தது.
இந்த பேரணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள்
மற்றும் தொண்டர்கள் சிவப்பு சீருடை அணிந்து, செங்கொடி ஏந்தியபடியும், முழக்கமிட்டபடியும் பேரணியாக சென்றனர்.
பொதுக்கூட்டம்
தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.புருஷோத்தம ரெட்டி
தலைமை வகித்தார். தளி ஒன்றியச்செயலாளர்
ஆர். நடராஜன்,
மூத்த நிர்வாகி டி.எஸ்.பாண்டியன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மாநிலச் செயலாளர்
கே. பாலகிருஷ்ணன்
சிறப்புரையாற்றினார்.
மற்றும்
முன்னாள் எம்எல்ஏவும், மாநில குழு உறுப்பினருமான டில்லிபாபு,
மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ்,
மூத்த உறுப்பினர்கள் இளம்பரிதி, நாகராஜரெட்டி, ஆர் சேகர், ஜி.கே.நஞ்சுண்டன்,
சி.பிரகாஷ், சி.பி. ஜெயராமன், கே.மகாலிங்கம்,
லெனின்முருகன், ஆஞ்சலாமேரி, டி.கே.நவரோஜ்,
அல்போன்ஸ், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்
கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் டி.ராஜா
நன்றி கூறினார்.
இந்த அரசியல் விளக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்
ஓசூர் மாநகராட்சி பகுதியிலிருந்து
பி.ஜி.மூர்த்தி
மாநகர கமிட்டி உறுப்பினர்
எஸ்.வாசுதேவன்
சிஐடியூ மாவட்ட தலைவர்
வி.சேதுமாதவன்
முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்
ஆனந்தகுமார்
நாகேஷ்பாபு
மாநகர செயலாளர்
ஆர்.கே. தேவராஜ்
ஓசூர் ஒன்றிய செயலாளர்
எம். ரவி
டி.ஒய்.எப்.ஐ. முன்னாள் மாவட்ட
செயலாளர்
மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம்,அஞ்செட்டி, ஓசூர் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.