கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் அருகே
சாலை விபத்தில் படுகாயமடைந்த
நபரை மீட்டு
குடிநீர் வழங்கி உடனடியாக
108 ஆம்புலன்ஸில்
கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த
மாவட்ட ஆட்சியர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்களுக்கு
பொதுமக்கள் நன்றி.
ஓசூர். நவ. 22. -
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம்
பி.ஆர்.ஜி. மாதேபள்ளி பகுதியில்
கார் மற்றும் இருசக்கர வாகனம்
மோதிய விபத்தில் சிக்கி படுகாயமடைந்த
நபரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸில்
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகே
அங்கிருந்து புறப்பட்டுச்சென்ற
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார். இ.ஆ.ப
அவர்களின் செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள்
நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நவ. 22-ம் தேதியன்று பணி நிமித்தமாக பர்கூர் சென்றார்.
அவர் செல்லும் வழியில் BRG மாதேபள்ளி என்ற
இடத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம்
மோதிக்கொண்ட விபத்தில்
இருசக்கர வாகனத்தில் வந்த
சின்ன காரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கிய ராமச்சந்திரனுக்கு உடனடியாக தண்ணீர் வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்பு உடனடியாக
108 ஆம்புலன்ஸ் வரவழைத்து காயமடைந்த
நபரை சிகிச்சைக்காக
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் காயமடைந்த ராமச்சந்திரன் அவர்களுக்கு
உயர் சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி
மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு
தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
பொது மக்கள் நன்றி - பாராட்டு
விபத்தில் காயமடைந்த நபருக்கு உடனடியாக
தண்ணீர் கொடுத்து ஆம்புலன்ஸ் வரும் வரை
அங்கேயே காத்திருந்து மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு
அப்பகுதி மக்கள் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
----------------------------------------.