கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு
சுகாதாரத்துறை சார்பில்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்
மேயர் எஸ்.ஏ. சத்யா பங்கேற்பு
ஒசூர், பிப். 11. –
ஓசூரில் தேசிய குடற்புழு நீக்கும்
தினத்தை முன்னிட்டு
முத்துராயன் ஜீபி,
தொடக்கப்பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு
குடற்புழு நீக்க மாத்திரைகளை
மேயர் எஸ்.ஏ. சத்யா வழங்கினார்.
ஓசூர் மேயர் எஸ்.ஏ. சத்யா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில்
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் முத்துராயன் ஜீபி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில்
ஓசூர் மேயர் எஸ்.ஏ. சத்யா,
துணை மேயர் ஆனந்தய்யா,
மாநகர சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன்,
மாநகர கல்வி குழு தலைவர் ஸ்ரீதர்,
மாநகர நல அலுவலர்
மருத்துவர் அஜிதா
ஆகியோர் கலந்து கொண்டு
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்கள்.
இது குறித்து மாநகர நல அலுவலர்
மருத்துவர் அஜிதா கூறியதாவது,
ஒசூர் மாநகராட்சியில்,
ஒரு வயது முதல், 19 வயது வரை
76 ஆயிரத்து 117 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டு,
இதுவரை 74 ஆயிரத்து 852 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள்
20 வயது முதல், 30 வயது வரை உள்ள
19,210 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டு,
இதுவரை 18 ஆயிரத்து 527 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
குடற்புழு தொற்றினால்
ஊட்டச்சத்து குறைபாடு,
சோர்வு,
சுகவீனம்,
படிப்பில் கவனமின்மை,
பசியின்மை,
ரத்தசோகை,
குமட்டல்,
வாந்தி
உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
குடற்புழு தொற்றிலிருந்து விடுபட,
இந்த மாத்திரைகளை உட்கொள்வது அவசியமாகும்.
காலை அல்லது மதியம் உணவு உண்டபின் அரை மணிநேரம் கழித்து, இம்மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும்.
இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
இம்மாத்திரைகள் மாவட்டத்தின்
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
துணை சுகாதார நிலையங்கள்,
அங்கன்வாடி மையங்கள்,
அரசுப் பள்ளி,
கல்லுாரி,
ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது.
எனவே குழந்தைகள் மற்றும்,
20 வயது முதல், 30 வயதுடைய
பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-----------------------------------------------.