கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோயில்
தேர் திருவிழா முன்னிட்டு
பால் கம்பம் நடும் விழா
ஓசூர். பிப்ரவரி. 10. -
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மலைக்கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் உள்ள தேர்ப்பேட்டை மலை மீது பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
1000 ஆண்டுகள்
பழமையான கோயில்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வரும் மார்ச் மாதம், 13 ம் தேதி துவங்கி, 27 ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான
தேரோட்டம்
மார்ச் - 14ம் தேதி நடக்க உள்ளது.
அதனை தொடர்ந்து,
மார்ச் -15ம் தேதி ராவண உற்சவம்,
16-ம் தேதி தெப்ப உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
கிராம தேவதைகள்
பல்லக்கு ஊர்வலம்
மேலும் இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி 35-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலம் மற்றும் கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
பால் கம்பம் நடும் விழா
தேர்த்திருவிழாவை முன்னிட்டு
பிப்ரவரி 10-ம் தேதி காலை தேர்ப்பேட்டை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதைதொடர்ந்து தேர்பேட்டை சந்திர சூடேஸ்வரர் மண்டபம் முன், பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில்
ஐஎன்டியூசி தேசிய தலைவரும்,
முன்னாள் எம்எல்ஏ.
தேர்க்கமிட்டி தலைவர்,
கே.ஏ.மனோகரன்,
மாநகர சுகாதாரக் குழு தலைவர்
மாதேஸ்வரன்,
பாஜக முன்னாள் மாவட்ட தலைவர்
நாகராஜ்,
திமுக பகுதி செயலாளர் ராமு, அதிமுக பகுதி செயலாளர் ராஜி,
தேர்க்கமிட்டி நிர்வாகிகள் முன்னிலையில்,
பால் கம்பம் தேர் வீதியில் வலம் வந்து நடப்பட்டது.
தொடர்ந்து, பூசாரி வாசீஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேர் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பார்வதி நாகராஜ், கிருஷ்ணவேணி ராஜூ,
பாஜக பிரவீன்குமார், முன்னாள் கவுன்சிலர் ரோஜா பாண்டியன், அதிமுக சூடப்பா, பாலு, சந்திரன், ஆதி,
கிராம நிர்வாக அலுவலர்(ஓய்வு) பாலகிருஷ்ணன்,
காங்கிரஸ் கட்சி சத்தியமூர்த்தி மற்றும்
தேர்ப்பேட்டை பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
படங்கள் - ஜோதி ரவிசுகுமார்.