ஓசூர் மாநகராட்சி 22-வது வார்டில்
கமிஷனர் ஆய்வு
மண் சாலைகள் விரைவில்
தார் சாலைகளாக
மாற்றியமைக்கப்படும்
கமிஷனர் உறுதி
ஓசூர். ஜனவரி. 21. –
மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆய்வு
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் உள்ள மண் சாலைகளை தார்சாலைகளாக மாற்றியமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வு பணியின் போது, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் உறுதியளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 22-வது வார்டில் உள்ள
மண் சாலைகளை சீரமைத்து
தார் சாலைகள்
அமைக்க வேண்டும்.
மேலும் இந்த வார்டில்,
நூலகம்,
பூங்கா,
விளையாட்டுத்திடல்,
நகர்புற நலவாழ்வு மையம்,
வரிவசூல் மையம்
ஆகியவை அமைக்க வேண்டும்
என்பது உட்பட பல கோரிக்கைகளை,
இந்த வார்டு மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
22-வது வார்டு கவுன்சிலரும், பொது சுகாதாரக்குழு தலைவருமான என்.எஸ்.மாதேஸ்வரன்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 22-வது வார்டு கவுன்சிலரும், பொது சுகாதாரக்குழு தலைவருமான என்.எஸ்.மாதேஸ்வரன்,
கமிஷனர் ஸ்ரீகாந்திடம், மனு வழங்கி, தங்கள் வார்டில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதையேற்று, 21-ம் தேதி காலை 22-வது வார்டில உள்ள
பூஞ்சோலை நகர்,
நியூதேஜாஸ் நகர்,
முனீஸ்வர் நகர்,
கிருஷ்ணப்பா தோட்டம்,
முனீஸ்வர் நகர் விரிவாக்கம்
ஆகிய குடியிருப்பு
பகுதிகளில் கமிஷனர் ஸ்ரீகாந்த்,
மாநகர பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரனுடன் சென்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது,
முனீஸ்வர் நகரில்
நகர்புற நலவாழ்வு மையம்,
வரி வசூல் மையம்
அமைப்பதற்கான இடத்தையும்,
நியூதேஜாஸ் நகரில்
நூலகம்
அமைப்பதற்கான இடத்தையும்,
கமிஷனர் ஆய்வு செய்தார்.
முனீஸ்வர்நகரில் வசிக்கும்
அர்ஜுனா விருது பெற்ற பாட்மிண்டன் வீராங்கணை நித்யாஸ்ரீ
வீட்டிற்கு சென்ற கமிஷனர் ஸ்ரீகாந்த்,
அங்கு அவரது தந்தை சிவனை சந்தித்து பேசினார்.
அப்போது சிவன் மற்றும் அப்பகுதி மாணவ, மாணவிகள், இப்பகுதியில் மண் சாலைகள் அதிகமாக இருப்பதால் மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும், ஆகவே தார்சாலை அமைக்க வேண்டும் என கமிஷனரிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட
கமிஷனர், விரைவில் மண் சாலைகள்,
தார் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது
மாநகர பொது சுகாதாரக்குழு தலைவர்
என்.எஸ்.மாதேஸ்வரன்.
மாநகராட்சி செயற்பொறியாளர்
நாராயணன்.
உதவி பொறியாளர்
பிரபாகரன்.
முனீஸ்வர்நகர் குடியிருப்போர்
நலச்சங்க தலைவர்
பிரகாஷ்.
செயலாளர்
ரவி
உட்பட பலர் உடனிருந்தனர்.
------------------------------------------