கூகுள்...
1996 ஆம் வருடம் சனவரி மாதம்,
லாரி பேஜ் (Larry Page)
மற்றும் அவரது சக மாணவரான
சேர்ஜி பிரின் (Sergey Brin)
என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின்
(இணையங்கள் இடையிலான கணித தொடர்பு)
முடிவில் தோன்றியதாகும்.
ஆகஸ்ட் – 21 – 1973 –
கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவரான
”செர்ஜே மிகலாயோவிச் பிரின்”
(Sergey Brin)
52 - வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 21. -
பேஜ் ரேங்கிங் அல்காரிதம் ஆனது
தேடலை மிக விரைவாகவும்,
சரியாகவும் கொடுக்க உதவுகிறது.
செர்ஜே பிரின்
கூகுள் என்னும் நிறுவனத்தை லாரி பேஜ் என்பவருடன் இணைந்து தொடங்கினார்.
இரஷ்ய நாட்டின் யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார்.
இவருக்கு ஆறு அகவை ஆனபோது இவருடைய தாய் தந்தையுடன் செர்ஜே
மாசுகோவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறினார்.
மேரிலாந்து பல்கலைக் கழகத்தில் கணக்கு மற்றும் கணினிக் கல்வி ஆகியவற்றில் கல்வி பயின்று பட்டம் பெற்றார்.
பின்னர்
ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டார்.
அவ்வமயம் லாரி பேஜ் என்னும் உடன் பயிலும் மாணவருடன் நட்பு ஏற்பட்டது.
கூகுள்
இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தை முதலீடாகக் கொண்டு தொடங்கினார்கள்.
கூகுள்... 1996 ஆம் வருடம் சனவரி மாதம்,
லாரி பேஜ் (Larry Page)
மற்றும் அவரது சக மாணவரான
சேர்ஜி பிரின் (Sergey Brin)
என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும்.
ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும்,
வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார்.
இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும்,
அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர்.
---------------------------------------.