பெங்களுரு
ஆனேக்கல் தாலுகாவில்
வீர சைவ லிங்காயத்
மகாசபை கூட்டம்
புதிய நிர்வாகிகள்
பதவியேற்பு
ஓசூர். ஜனவரி. 06. –
பெங்களுரு ஆனேக்கல் தாலுகா,
மாஸ்தேனஹள்ளியில் வீர சைவ லிங்காயத் மகாசபை சார்பில் நிர்வாகிகள்
பதவியேற்பு மற்றும் உறுப்பினர்களின் கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புதிய நிர்வாகிகளை
பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
கும்மளாபுர மடத்தின்
சிவானந்த சிவாச்சார்யா சுவாமிகள்
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கும்மளாபுர மடத்தின் சிவானந்த சிவாச்சார்யா சுவாமிகள் கலந்து கொண்டு பேசியதாவது,
லிங்காயத் சமுகத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்புகளில் வீர சைவ லிங்காயத் மகாசபை ஈடுபட வேண்டும். பதவி என்பது ஒரு பொறுப்பாகும். இதனை உணர்ந்து புதிய நிர்வாகிகள் கிராமங்களுக்கு சென்று சமுதாயத்தை ஒன்றிணைக்க வேண்டும்.
சமுதாய மாற்றத்திற்கு கல்வி முக்கியமான ஆயுதமாகும்
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளின்
கல்விக்காக அமைப்பு உதவ வேண்டும். இதன் மூலம் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சமுதாய மாற்றத்திற்கு கல்வி முக்கியமான ஆயுதமாகும். ஆகவே ஒவ்வொருவரும் நல்ல கல்வி பெற வேண்டும். ஒன்றுபட்ட முயற்சியால்
சமூகத்தின் வலிமையை அதிகரிக்க செயல்பட வேண்டும். மடங்கள் மற்றும் மத அமைப்புகள்
கல்வி, உள்ளிட்ட வசதிகளை வழங்க உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வீரசைவ லிங்காயத் மகாசபை
தாலுகா தலைவர்
ஹின்னக்கி ஜெயண்ணா
பேசுகையில்,
ஆனேக்கல் நகரில் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக நிலம் ஒதுக்கிட எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஆனேக்கல்லில் பசவேஸ்வரர் சிலை அமைக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
வீரசைவ லிங்காயத் வங்கி நிறுவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் வசதி உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் முன்னேற்றத்திற்கு அமைப்பு பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் பிடிசிசி வங்கியின்
இயக்குநர் கே.எஸ்.நடராஜ்,
சரண சாகித்ய பரிஷத்
தலைவர் சிவண்ணா,
தலைவர்கள் சிக்கரேவண்ணா, தொம்மசந்திரா ஜெயண்ணா,
ஹென்னகர மகேஷ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
வீரசைவ லிங்காயத் மகாசபையின்
தலைவராக ஹின்னக்கி ஜெயண்ணா,
செயல்தலைவராக அருண்,
துணை தலைவர்களாக மஞ்சுளா நீலகண்டப்பா,
சந்திரசேகர். விருபாக்ஷப்பா,
முதன்மை செயலாளராக கிரண்குமார்,
பொருளாளராக மகேஷ், அமைப்புச் செயலாளர்களாக ஆர்.பரமசிவய்யா, உமேஷ்,
உறுப்பினர்களாக விஜயசந்திரா, ராஜண்ணா,
சந்திரப்பா, சந்திரசேகர், பாரதி விருபாக்ஷயா,
மல்லிகம்மா, கீர்த்தி, சிவகுமார்,
விஜய், கணேஷ், மஞ்சுநாத்,
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனேக்கல் டவுன் தலைவராக
எஸ்.ஆர்.எஸ்.சந்திரசேகர்,
சர்ஜாபுரா பகுதி தலைவராக
ஹரீஷ்
அத்திபேலே பகுதி தலைவராக
ரமேஷ்
கசபா பகுதி தலைவராக
சந்திரப்பா
ஜிகணி பகுதி தலைவராக
ராஜசேகர்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மகளிர் அணி
மகளிர் பிரிவின் தலைவராக குசுமா,
கவுரவத் தலைவராக நாகலாம்பிகா
முதன்மை செயலாளராக ரூபா,
துணை தலைவர்களாக பாரதி பசவராஜ்,
புஷ்பாமஹாந்தேஷ், புஷ்பாராஜசேகர்,
செயலாளர்களாக நளினா பரமசிவய்யா,
பவ்யா, மஞ்சுளா, நாகரத்தினா, புஷ்பா,
பொருளாளராக சுபாஆராத்யா, சாரா,
அமைப்புச் செயலாளர்களாக சுஜா, ஆஷா,
அனுசூயா,
ஆலோசனை குழு உறுப்பினர்களாக
மம்தா யஜமான், விசாலா
ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.