ஓசூர் மாநகராட்சியில்
“திராவிட பொங்கல்
சமூக நீதிக்கான திருவிழா”
உணவு மற்றும் உணவு பொருள்
வழங்கல் துறை
அமைச்சர் சக்கரபாணி,
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்,
மேயர் எஸ்.ஏ. சத்யா,
ஆகியோர் பங்கேற்பு
ஒசூர். ஜன.14. -
ஒசூர் மாநகர திமுக சார்பில்
திராவிட பொங்கல்
சமூக நீதிக்கான திருவிழா
என்ற தலைப்பில் பொங்கல் விழா
மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஓசூர் ASTC அட்கோ பகுதியில் நடந்த இந்த விழாவுக்கு
ஓசூர் மாநகர மேயர்
எஸ். ஏ. சத்யா.
தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
உணவு மற்றும் உணவு வழங்கல் துறை
அமைச்சர் சக்கரபாணி,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்.
ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து பொங்கல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
இந்த விழாவில் பெண்களுக்கான
கோலப்போட்டி,
கயிறு இழுக்கும் போட்டி,
லெமன் ஸ்பூன்,
பள்ளி குழந்தைகளின் நடனம்,
ஓவியப் போட்டி,
உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும்
கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில்
உணவு மற்றும்
உணவு வழங்கல் துறை
அமைச்சர் சக்கரபாணி
பேசியதாவது,
ஒசூர் மாநகராட்சிக்கு
என்னென்ன தேவையோ
அனைத்தையும் நிறைவேற்றியவர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஒசூருக்கு பன்னாட்டு விமான நிலையம்,
ரூ.100 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை,
புதிய பேருந்து நிலையம்,
தொழில்சாலைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் 4 வழிச்சாலைகளாக தரம் உயர்த்தியது,
ஒசூர் தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் எனவும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அறிவித்துள்ளார்.
விரைவில்
ஒசூர் பேருந்து நிலையம்,
வணிக வளாகம்
ஆகியவை திறந்து வைக்கப்படும்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
என்று அழைக்கப்படுவது கோவை.
அதற்கு அடுத்தப்படியா தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஒசூர் வளர்ந்துள்ளது என்றால்
அதற்கு வித்திட்டவர்
முன்னாள் முதல்வர் மு.க. கருணாநிதி.
அவர்தான் தொலைநோக்கு சிந்தனையுடன்
முதல் சிப்காட்டை ஒசூரில் தொடங்கி
தொழில் புரட்சிக்கு வித்திட்டார்.
அதன்பிறகு ஒசூரில் 2,3,4 முடிந்து 5 வது சிப்காட் தொடங்கப்பட்டு தொழில் புரட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தொழில்சாலைகள் அறிவிப்புகள் வந்தால்
அதிக அளவில் தொழிற்சாலைகள்
ஒசூருக்கு வருகின்றன.
பல்வேறு தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள்,
அதன் மூலம் படித்த உள்ளூர்
இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது.
அதிக முதலீடுகள் ஈர்த்து வரும் மாநிலம் தமிழகமாக உள்ளது.
உங்கள் கனவுகளை சொல்லுங்கள்
என்ற புதிய திட்டத்தை
முதல்வர் அறிவித்துள்ளார்.
உங்கள் தேவைகளை சொல்லுங்கள்.
அதிகாரிகள் உங்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களிடம் உங்கள் தேவைகள் கூறுங்கள்.
அந்த விருப்பங்களை
அடுத்தத் தேர்தலிலும்
திமுக அரசு தான் அமையும்.
அப்பொழுது உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும்.
2030 க்குள் தமிழகத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் அரசாக
திமுக 2.0 அரசு அமையும்.
வீடு, குடிநீர், கழிவுநீர் கால்வாய் ,
தெருவிளக்கு, என எதுவாக இருந்தாலும் தெரிவிக்கலாம்.
கடந்த காலங்களில் ஒசூர் தொகுதியில்
தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளித்து வந்துள்ளீர்கள்.
வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும்
ஆதரவு தந்து
முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரத்தை வலுப்படுத்த வேண்டும் என
அமைச்சர் கூறினார்.
இந்த பொங்கல் விழாவில்
முன்னாள் எம்எல்ஏ முருகன்,
மாவட்ட பொருளாளர் சுகுமரன்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
எல்லோர மணி,
மாநில கலை இலக்கிய துணை செயலாளர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
பகுதி செயலாளர்கள் ஆனந்தய்யா,
ராமு, வெங்கடேஷ், ராஜா,
நகர அவை தலைவர் செந்தில்குமார்,
தொமுச மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சுமன்,
ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி,
அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள்,
துணை அமைப்பாளர்களும், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------.