தேங்காய்...
நாம் உட்கொள்ளக் கூட ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.
இது ஏராளமான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது.
அதிலும் தேங்காய்க்குள் காணப்படும்
வெள்ளை சதை போன்ற பகுதி
இன்னும் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.
தேங்காய் சதையில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படுகிறது.
இதில்
மாங்கனீசு,
பொட்டாசியம்,
பாஸ்பரஸ்,
தாமிரம்,
இரும்பு,
துத்தநாகம்
உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.
செப்டம்பர் 2 –
உலகத் தேங்காய் நாள்
(world coconut day)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். செப்டம்பர். 2. -
உலக தேங்காய் நாள்
1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.
வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.
ஆரோக்கியமான வாழ்வு
தேங்காய் சதைப்பகுதியை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்க இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு நீங்கள் ஏராளமான நன்மைகளை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அளவோடு தேங்காயை எடுத்து வருவது ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த வழியாக அமையும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
பொதுவாகவே நம் இந்திய சமையலை பொருத்த வரை தேங்காயை சமையலில் அதிகமாக சேர்ப்பது உண்டு.
தேங்காயில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
தேங்காய் நாம் உட்கொள்ளக் கூட ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.
இது ஏராளமான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது.
அதிலும் தேங்காய்க்குள் காணப்படும் வெள்ளை சதை போன்ற பகுதி இன்னும் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.
தேங்காய் சதையில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படுகிறது.
இதில்
மாங்கனீசு,
பொட்டாசியம்,
பாஸ்பரஸ்,
தாமிரம்,
இரும்பு,
துத்தநாகம்
உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.
ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுகிறது.
இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.
இந்த கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
தேங்காய் சதையில் காணப்படும்
வைட்டமின்கள் ஏ, டி, ஈ
மற்றும் கே ஆகியவை குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகின்றன,
இது உங்கள் செரிமான அமைப்பை மற்ற பிரச்சினைகளில் இருந்தும் வீக்கத்தில் இருந்தும் பாதுகாக்கிறது.
தேங்காய் சதையின் இதர நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் சதையில் காணப்படும் தேங்காய் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
இது குறித்து மக்களிடையே ஆராய்ச்சி செய்த போது ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டவர்களை விட தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தேங்காய் சதை உங்க உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
இது வயிறு நிரம்பிய உணர்வை தரக் கூடியது.
இதனால் நீங்கள் அதிகமாக நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைக்கப்படும்.
அது மட்டுமல்லாமல் தேங்காயின் சதைப்பகுதி கொழுப்பு எரிபொருளாக செயல்படுகிறது
என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.
தேங்காய் சதை
ஆரோக்கியமான கொழுப்பு ,
தாதுக்கள்,
நார்ச்சத்துக்கள்
இவற்றின் வளமான மூலங்களாகும்.
மோனோ சங்கிலி ட்ரைகிளிசரைடுகள்
தேங்காயில் உள்ளன. இவை உடனடியாக சீரணிக்கப்படுகிறது.
தேங்காய் சதையில் உள்ள தாதுக்கள்
மாங்கனீசு,
இரும்பு,
தாமிரம்,
மற்றும்
மெக்னீசியம்
போன்றவை வெவ்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை.
எனவே உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்கள் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
--------------------------------------------------.