ஓசூர் 'அன்பு செய்வோம்'
அறக்கட்டளை
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி ஒன்றியம்
அஞ்செட்டி வட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவியர் விடுதி மாணவிகளுக்கு
ஓசூர் 'அன்பு செய்வோம்'
அறக்கட்டளை சார்பாக
குளிர் கால ஆடைகள் நன்கொடை
ஓசூர். டிச. 02. –
அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவியர் விடுதி
தளி ஒன்றியம் அஞ்செட்டி வட்டத்தில்
இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவியர் விடுதியில் தங்கி பயிலும்
55 மாணவிகளுக்கு குளிர்கால பயன்பாட்டுக்கு
ஓசூர் அன்பு செய்வோம் அறக்கட்டளை சார்பில்
ரூ. 20ஆயிரம் மதிப்பிலான குளிர்கால ஆடைகள்
நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஓசூர் 'அன்பு செய்வோம்'
அறக்கட்டளை நற்பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில்
அன்பு செய்வோம் அறக்கட்டளை
இயங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் சார்பாக
மலைவாழ் பகுதியில் வசிக்கும்
மாணவ, மாணவிகளுக்கு
மாலை நேர கல்வி வகுப்புகள்,
குழந்தைத் திருமண தடுப்பு பிரச்சாரங்கள்,
அரசுப் பள்ளிகளில்
சுகாதாரமான சுற்றுச்சூழலை
மேம்படுத்த மரக்கன்றுகள் நடுதல்,
மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு
உபகரணங்களை வழங்குதல்
போன்ற பல நற்பணிகளை
செய்து வருகின்றனர்.
அஞ்செட்டி அரசு மாணவியர்
விடுதிக்கு நன்கொடை
இந்த சமூக பணிகளின் தொடர்ச்சியாக
டிசம்பர் 2-ம் தேதியன்று
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம்,
அஞ்செட்டி வட்டத்தில் இயங்கி வரும்
அரசு மேல்நிலைப் பள்ளி
மாணவியர் விடுதியில் தங்கி பயிலும்,
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு
வரையிலான 55 மாணவியர்களுக்கு
குளிர் கால ஆடைகளை
அன்பு செய்வோம் அறக்கட்டளை சார்பில்
நன்கொடையாக வழங்கும்
நிகழ்வு நடைபெற்றது.
விடுதி மாணவிகளின் கோரிக்கை
தற்போது குளிர் காலம் என்பதாலும்,
குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும்,
மாணவியர் உடல் நலன் மற்றும்
தடையற்ற கல்வி ஆகியவற்றை
கருத்தில் கொண்டு,
விடுதி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று
ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள,
ஸ்கார்ஃப்,
துண்டு,
ஸ்வெட்டர்
ஆகிய குளிருக்கு பாதுகாப்பு தரும் ஆடைகளை
'அன்பு செய்வோம்' அறக்கட்டளை சார்பாக
நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
'அன்பு செய்வோம்' அறக்கட்டளை
நிறுவனர் கௌரி
அவர்கள்,
அறக்கட்டளை உறுப்பினர்
அருண்
அவர்கள்,
மற்றும் மாணவியர் விடுதி காப்பாளர்கள்,
மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------.