கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மாவட்ட தலைமை
அரசு மருத்துவமனையில்
உலக செவிலியர் தின விழா
ஓசூர். மே. 12. –
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மாவட்ட தலைமை
அரசு மருத்துவமனை
மற்றும்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
மற்றும்
ஓசூர் வாசவி கிளப் ஆப் எலைட்
இணைந்து
உலக செவிலியர் தின விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஓசூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு
ஓசூர் மேக்னம்
அரிமா சங்க தலைவர்
அரிமா. மகேந்திரன்
முன்னிலை வகித்தார்.
தலைமை மருத்துவ அலுவலர்
டாக்டர். லட்சுமிஸ்ரீ
தலைமை வகித்து
தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து உலக செவிலியர் தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.
மேலும் தலைமை அரசு மருத்துவமனையின்
NSG கண்காணிப்பாளர் மற்றும்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க துணைத்தலைவர்
அரிமா. ஆறுமுகசாமி
ஆகியோர் உரையாற்றினார்கள்.
பரிசளிப்பு
இந்த விழாவில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டி மேக்னம் அரிமா சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு
செவிலியர்கள் பங்கேற்ற நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
வாசவி கிளப் ஆப் எலைட்,
டாக்டர். விவேக்,
டயட் ஃப்ரிகால் நிறுவன
பொதுமேலாளர் சரவணன்,
ஆகாஷ் டோயோட்டோ
நிர்வாக இயக்குநர் மனோஜ்,
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
அரிமா என்.கண்ணன்.
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா ஆர். ரவிசங்கர்.
செயலாளர்(செயல்திட்டம்)
அரிமா பி. மாதேஸ்குமார்.
பொருளாளர்,
மற்றும்
தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.