கிராமம் தோறும்
புத்தொழில் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மாநகராட்சி,
பத்தலப்பள்ளி,
FORT அலுவலக கூட்டரங்கில்,
குறு, சிறு, நடுத்தர துறையின் கீழ் செயல்படும்
தமிழ்நாடு புத்தொழில் மற்றும்
புத்தாக்க இயக்கமான StartupTN சார்பில்,
"Disruptors Connect" நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். டிச. 10. –
தமிழ்நாடு புத்தொழில் மற்றும்
புத்தாக்க இயக்கமான StartupTN
"Disruptors Connect" நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மாநகராட்சி,
பத்தலப்பள்ளி, FORT அலுவலக கூட்டரங்கில்,
குறு, சிறு, நடுத்தர துறையின்
கீழ் செயல்படும்
தமிழ்நாடு புத்தொழில் மற்றும்
புத்தாக்க இயக்கமான StartupTN சார்பில்,
"Disruptors Connect" நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் 10.12.2025 அன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
ஊரகப்பகுதிகளில் சிறப்பாக இயங்கும் புத்தொழில் நிறுவனங்களை தொழில் வளர் காப்பகங்களுடன் இணைத்தல்,
தொழில்முனைவு வழிகாட்டுநர்களுடன் இணைத்தல்,
பிற முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு திரட்ட உதவுதல்,
சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்,
பெருநிறுவனங்களுடன் இணைத்தல்
67607 முழுமையான ஆதரவுகளை
வழங்குவதன் வாயிலாக
ஊரகப் பகுதிகளில்
புத்தொழில் நிறுவனங்களை கட்டமைப்பதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், சிறப்பான புத்தாக்க மாதிரியாக இருப்பின்,
அடுத்தகட்ட வளர்ச்சிக்காக
ரூ.1 லட்சம் மானிய நிதி வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில்,
அறிவுசார் சொத்துரிமை குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
புத்தொழில் தொழில்முனைவோருக்குத்
தேவையான நிதி,
சட்ட ஆலோசனை மற்றும்
சந்தை வழிகாட்டுதல்களை
ஒரே இடத்தில் வழங்கும் விதமாகவும்,
கிராமம் தோறும் புத்தொழில் துவக்க விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த
100-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்
கலந்து கொண்டனர்.
மேலும்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
DPIIT அங்கீகாரம் பெற்ற
194 புத்தொழில் நிறுவனங்கள் இருப்பதையும்
அவை வேளாண்மை,
தகவல் தொழில்நுட்ப சேவைகள்,
தொழில்நுட்ப வன்பொருள்,
சுகாதாரம் மற்றும்
உயிர் அறிவியல்,
விண்வெளி மற்றும் பாதுகாப்பு,
பசுமைத் தொழில்நுட்பம்,
கழிவு மேலாண்மை,
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,
வாகனவியல் ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறது.
மேலும்,
இது போன்ற புத்தொழில் முனைவோர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து
வளர்ச்சியடைய மாவட்ட நிர்வாகம்
அவர்களுக்கு தேவையான
ஊக்குவிப்பை வழங்கும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
குந்தாரப்பள்ளி கிராமத்தில்
"கிராமம் தோறும் புத்தொழில்"
(Village Startup Community)
என்ற திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்
திரு.பிரசன்னா பாலமுருகன்,
மாவட்ட முன்னே வங்கி மேலாளர்
திரு.சரவணன்,
வட்டாட்சியர்
திரு.குணசிவா
மற்றும்
Startup வட்டார திட்ட உதவியாளர்
திரு.தீபக்ராஜு
ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
-------------------------------------------.