ஓசூரில் மாநகர திமுக சார்பில்
துணை முதல்வர் உதயநிதி
ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கைப்பந்து போட்டிகள்
எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
ஓசூர். டிச. 01. –
by Jothi Ravisugumar
மாவட்ட அளவிலான
கைப்பந்து விளையாட்டு
போட்டிகள்
ஓசூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநகர திமுக சார்பில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடந்தது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு திடல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, காமராஜ் காலனியில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு திடலில் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மேயர் எஸ்.ஏ.சத்யா
தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த இந்த கைப்பந்து போட்டி நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா வரவேற்புரை நிகழ்த்தினார்.
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தலைமை வகித்து முதல் போட்டியை தொடங்கி வைத்தார்.
12 அணிகளின் வீரர்கள்
பங்கேற்பு
மாவட்ட அளவில் நடந்த இந்த கைப்பந்து போட்டிகளில் ஓசூர், பேகேப்பள்ளி, மாட்ரஹள்ளி உள்ளிட்ட 12 அணிகளின் வீரர்கள் பங்கேற்று திறமையாக விளையாடினார்கள்.
முதல் போட்டியில் மாட்ரஹள்ளி அணியும், பேகேப்பள்ளி அணி வீரர்களும் விளையாடினர்
துணை மேயர் ஆனந்தய்யா
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார், தியாகராஜ், கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார்.
பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், திம்மராஜ், அணிகளின் அமைப்பாளர்கள் கண்ணன், சுமன், ராஜா, மகேஷ்குமார், மாணிக்கவாசகம், அழகரசன், குமார், செல்வம், பாலமுரளி, சீனிவாசன், ரத்தினசிங், ரூபி, நசீர், சபீர், ராபின், சையத், ஆரிப், மாமன்ற உறுப்பினர்கள் ஆஞ்சி, நிசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.