* 'இந்தியா - சிப்பாய் புரட்சிக்குப்
பின்னும் முன்னும்'
என்ற தலைப்பில் இவர் எழுதிய
கட்டுரை வெளியானதால்,
இவரது புகழ் லண்டனில் பரவியது.
கல்வி உதவித்தொகை பெற்று,
1887-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற
முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்ற
சாதனையாளர்
கல்வியாளர்,
வேதியியல் அறிஞர்
“ஆச்சார்யா” பிரபுல்ல சந்திர ரே.
ஆகஸ்ட் 2 – 1861 -
வங்காளத்தை சேர்ந்த கல்வியாளர்,
வேதியியல் அறிஞரான
'ஆச்சார்யா' பிரபுல்ல சந்திர ரே
(Acharya Prafulla Chandra Ray)
164- வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 2. -
'ஆச்சார்யா' பிரபுல்ல சந்திர ரே
(Acharya Prafulla Chandra Ray)
* வங்கதேசத்தின் குல்னா மாவட்டம்
ராருலி கட்டிபரா கிராமத்தில்
(1861) பிறந்தார்.
இசையிலும் கல்வியிலும் ஆர்வம்
கொண்டிருந்த தந்தை,
தன் மகனுக்கு சிறந்த கல்வியை வழங்கினார்.
9 வயது வரை கிராமத்திலேயே பயின்றார்
பிரபுல்ல சந்திர ரே.
* குடும்பம் கல்கத்தாவில் குடியேறியது.
ஆங்கிலம்,
சமஸ்கிருதம்,
வங்க இலக்கியங்களை
கற்றுத் தேர்ந்தார்.
லத்தீன்,
கிரேக்க மொழிகள்,
பல நாடுகளின் வரலாறுகளைக் கற்றார்.
கல்கத்தா மெட்ரோபாலிடன்
(இன்றைய வித்யாசாகர் கல்லூரி)
கல்லூரியில் சேர்ந்தார்.
இங்கிலாந்து சென்று, எடின்பரோ பல்கலைக்கழகத்தில்,
அறிவியலில் பட்டம் பெற்றார்.
அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற
முதல் இந்தியர்
* 'இந்தியா - சிப்பாய் புரட்சிக்குப் பின்னும் முன்னும்' என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை வெளியானதால், இவரது புகழ் லண்டனில் பரவியது. கல்வி உதவித்தொகை பெற்று,
1887-ல் முனைவர் பட்டம் பெற்றார். அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.
* ஜகதீஷ் சந்திரபோஸின் ஆய்வுக்கூடத்தில் உதவியாளராக சேர்ந்தார்.
1896-ல் மாநிலக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பதவியேற்றார்.
மாணவர்களிடம் ஆய்வு மனப்பான்மையை
வளர்த்தார்.
மேகநாத் சாகா,
சாந்தி ஸ்வரூப் பட்நாகர்
உள்ளிட்ட சிறந்த அறிவியலாளர்களை
உருவாக்கியவர் இவரே.
* வீட்டில் தனியாக ஆய்வுக்கூடம் அமைத்து, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
அதிக நிலைத்தன்மை கொண்ட பாதரச நைட்ரேட் சேர்மத்தை கண்டறிந்தார்.
கந்தகம்,
பாஸ்பரஸ்,
பிளாட்டினம்
ஆகியவற்றின் கரிம உலோகச் சேர்மங்கள்
பற்றிய இவரது ஆய்வுகள்
குறிப்பிடத்தக்கவை.
* ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.
இந்திய மூலிகைகள் பற்றி ஆராய்ந்தார்.
அவற்றில் இருந்து மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
'பெங்கால் கெமிக்கல்ஸ்
அண்ட் ஃபார்மசூட்டிகல்ஸ்'
என்ற பெயரில் நாட்டின் முதல் மருந்து தயாரிப்புத் தொழிற்சாலையை 1901-ல் நிறுவினார்.
* சுயசரிதையை 2 தொகுதிகளாக
எழுதி வெளியிட்டார்.
10 ஆண்டுகள் கடுமையாக பாடுபட்டு ஆராய்ந்து,
இந்து மதத்தில் வேதியியல் குறிப்புகள் தொடர்பான நூலை 2 தொகுதிகளாக வெளியிட்டார்.
பிரம்ம சமாஜத்துடன் இணைந்து
சமூகநலப் பணிகளை மேற்கொண்டார்.
இந்திய வேதியியல் கழகம்,
இந்திய வேதியியல் கல்லூரி
ஆகியவற்றைத் தொடங்கினார்.
தனது ஆராய்ச்சிகள் சம்பந்தமாக
107 கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
மாநிலக் கல்லூரியில் 28 ஆண்டுகள் பணியாற்றினார். தலைசிறந்த ஆசிரியரான இவர்,
'ஆச்சார்யா'
என்று போற்றப்பட்டார்.
* இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
சாகித்ய பரிஷத் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
கல்கத்தா அறிவியல் கல்லூரியில் வேதியியல் ஆய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது
தன் ஊதியம் முழுவதையும் அந்த ஆய்வகத்தின் வளர்ச்சிக்கே செலவு செய்தார்.
கல்கத்தா,
டாக்கா
உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள்
இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
கதராடை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஏராளமான குடிசைத் தொழில்களைத்
தொடங்கினார்.
அறிவியல் துறையோடு,
சமூக மேம்பாட்டுக் களத்திலும் முனைப்புடன்
பாடுபட்ட பிரபுல்ல சந்திர ரே
83-ம் வயதில் (1944) மறைந்தார்.
------------------------------------------.