வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர
திருத்தப் பணிகள் 2026,
வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும்
தன்னார்வலர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யும் பணிகள் -
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
கிருஷ்ணகிரி. நவ. 25. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்,
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர
திருத்தப் பணிகள் -2026,
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட
கணக்கீட்டு படிவங்கள்,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,
தன்னார்வலர்கள்
மூலம் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு
படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யும் பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் 2025-11-25 அன்று நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின்
அறிவுறுத்தலின் படி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
6 சட்டமன்ற தொகுதிகளில்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர
திருத்தப் பணிகள், 2026
நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 04.11.2025 முதல் வீடுவீடாக
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம்
வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள்
94.30 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள்
திரும்ப பெறப்பட்டு இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யும் பணிகள்
நடைபெற்று வருகிறது.
இணையதளத்தில் பதிவேற்றும் பணி
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில்
மொத்தம் 2,65,403 வாக்காளர்கள்
உள்ள நிலையில், நாளதுவரை
2,54,564 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டது.
இதுவரை 1,56,617 கணக்கிட்டு படிவங்கள்,
வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்டு,
பெறப்பட்ட கணக்கிட்டு படிவங்கள்
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
தன்னார்வலர் மூலம் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும்,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,
தன்னார்வலர்கள் மற்றும்
ஊராட்சி செயலர்கள் வாயிலாக
வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி
செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள்
திரும்ப பெறப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தில்
6 சட்டமன்ற தொகுதிகளிலும்
வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து
பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள்
அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள்
தலைமையில் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யும் பணிகள்
நடைபெற்று வருகிறது.
சிறப்பு தீவிர திருந்த பணிக்கு
முழு ஒத்துழைப்பு
வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட
கணக்கெடுப்பு படிவங்களை சம்பந்தப்பட்ட
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம்
ஒரு படிவத்தை கையொப்பமிட்டு திரும்ப
வழங்க வேண்டும்.
மற்றொரு படிவத்தில் வாக்குச் சாவடிநிலை
அலுவலரிடம் ஒப்புகை பெற்று
தாங்களே வைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் வாக்காளர்கள் தங்களுக்கு
வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை
சரியான முறையில் பூர்த்தி செய்து
வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடம்
வழங்குமாறும், சிறப்பு தீவிர திருந்த பணிக்கு
அனைத்து வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு
வழங்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
------------------------------------.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தலைமையில்,
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
வாக்காளர் பட்டியல் சிறப்பு
தீவிர திருத்தப் பணிகள்
குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இவ்வாய்வின் போது,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
உதவி தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
உடன் இருந்தனர்.
---------------------------------------.