கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் முல்லை நகர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,
விஷன் 8000 –
ஓசூர் மாணவர் கண்ணொளி - 2025 சார்பாக,
அரசுப்பள்ளிகளில் பயிலும்
1458 மாணவ, மாணவிகளுக்கு
ரூ.14 லட்சம் மதிப்பில் கண் கண்ணாடிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்.
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
வழங்கினார்.
ஓசூர். அக். 16. –
“விஷன் 8000 -
ஓசூர் மாணவர் கண்ணொளி – 2025"
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “விஷன் – 8000”
ஓசூர் மாணவர் கண்ணொளி – 2025 சார்பில்
அரசுப்பள்ளிகளில் பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு
கண் கண்ணாடிகளை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்று
1458 மாணவ, மாணவிகளுக்கு
ரூ.14லட்சம் மதிப்பில்
கண் கண்ணாடிகளை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு -
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு,
புதுமைப்பெண்,
தமிழ்ப்புதல்வன்,
கல்வி உதவித்தொகை,
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
"நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி”
திட்டத்தின் மூலம்,
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
கூடுதல் வகுப்பறைகள்,
ஆய்வகங்கள்,
பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ வசதி
உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இன்று (16.10.2025)
சென்னை டாக்டர் அகர்வால் கண் பரிசோதனை மையம்,
ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் கிராண்ட்,
லயன்ஸ் கிளப் ஆப் ஓசூர் ஹில்ஸ்,
ஓசூர் ரோஸ் சிட்டி,
ஓசூர் சிப்காட்,
ஓசூர் ஏசிஇ எலக்ட்ரிக்கல்ஸ்,
கிருஷ்ணகிரி குறிஞ்சி இண்டர்நேஷ்னல் ட்ரஸ்ட்
மற்றும்
பள்ளிக்கல்வித்துறை
இணைந்து ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி,
முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி,
ஓசூர் ஆர்.வி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
காமராஜ் நகர்அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
ஆகிய பள்ளிகளில் பயிலும் 8000 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு, 1458 மாணவ, மாணவிகளுக்கு
ரூ.14 இலட்சம் மதிப்பில்
கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
கிட்டதட்ட 20 சதவிகித மாணவர்கள் கண் பார்வை குறைபாடுடன் உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் பள்ளி மாணவர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதாகும்.
ஆகையால் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசு
பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறமை தேடல் தேர்வு நடத்தி,
அதில் நல்ல மதிப்பெண் பெற்றால் 10 ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் காலத்தில் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
கல்வியும், ஆரோக்கியமும் மாணவர்களுக்கு இரு கண்கள் என்பதாகும்.
ஆகையால் கண்களை நாம் பாதுகாத்தால் தான் கல்வியும், ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும்.
அதனால் ஆரோக்கியத்திற்கு மதிப்பு கொடுத்து சத்தான உணவுகளை உண்டு,
கல்வியை நன்றாக பயின்று உயர் பதவிக்கு செல்ல வேண்டும்
என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
கீதன் விஜய்
தொடர்ந்து,
ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் 4 -ம் வகுப்பு பயிலும்
கீதன் விஜய் என்ற மாற்றுத்திறனாளி மாணவரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடியபோது,
அம்மாணவன் நானும் நன்றாக படித்து மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிவேன் என்று தெரிவித்ததற்கு, அம்மாணவரை பாராட்டி
புத்தகம் வழங்கிய
மாவட்ட ஆட்சித்தலைவர்,
வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ)
திரு.முனிராஜ்,
மாவட்ட கல்வி அலுவலர்
திருமதி.ரமாவதி,
முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்
திரு.காந்தி,
வட்டாட்சியர்
திரு.குணசிவா
மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
----------------------------------------.