கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
79 - வது சுதந்திர தின விழா
மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட்டம்
2024 - 25-ம் ஆண்டு முழு தேர்வில்
அதிக மதிப்பெண்கள்
எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு
“எனது நகரம் எனது பெருமை”
உறுதி மொழி ஏற்பு
பள்ளி அளவில் கலைத்திருவிழா
ஓசூர். ஆகஸ்ட். 15. -
பேடரப்பள்ளி மாநகராட்சி
நடுநிலைப் பள்ளி
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்
79-வது சுதந்திர தினவிழா
சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேடரப்பள்ளி,
3-வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
மாவட்டத்தில்
சிறந்த பள்ளி
இந்தப்பள்ளியில்1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நல்லொழுக்கத்துடன் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசுப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த அரசு நடுநிலைப்பள்ளியில்
2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி
79-வது ஆண்டு சுதந்திர தினவிழா
சிறப்பாக நடைபெற்றது.
மகாத்மா காந்தி
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு
பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி உருவப்படம் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழாவில் தலைமையாசிரியர்
பொன் நாகேஷ் -
விழாவுக்கு வருகை தந்த
கவுன்சிலர் ரஜினி காந்த்,
(பிடிஏ) லக்கப்பா, ரமேஷ், ரவி மற்றும் சுந்தரமூர்த்தி,
(எஸ்எம்சி) விஜி சுகன்யா மற்றும் அனைத்து பெற்றோர்களையும் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக
பேடரப்பள்ளி 3-வது வார்டு
கவுன்சிலர்
திரு. ரஜினிகாந்த்
அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளியில் தேசியக்கொடி ஏற்றினார்.
இந்த 79-வது சுதந்திர தினவிழாவில்
கடந்த ஆண்டு முழு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த (CLASS TOPPERS)
முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புக்கு ஒரு மாணவர் என
8 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
2024- 25-ம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள்
எடுத்த மாணவ, மாணவிகள்
(Class Toppers)
1. 1st STD – J. Mounika Sri (Best).
2. 2nd STD - S.Anamika Das – 298/300.
3. 3rd STD – H.Aardhya Kumari – 295/300.
4. 4th STD – K.Isai Priya – 298/300.
5. 5th STD – R.Suman – 463/500.
6. 6th STD – M.Monika – 487/500.
7. 7th STD – N.Metha – 466/500.
8. 8th STD – M.Melina sri – 491/500.
ஆகிய அதிக மதிப்பெண்கள் எடுத்த 8 மாணவ, மாணவிகளுக்கு
PTA துணை தலைவர் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் ரொக்கப் பரிசாக தலா ரூ. 250 விழங்கினார்.
எனது நகரம் எனது பெருமை
உறுதி மொழி ஏற்பு
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பின்படி பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளிக்கு சுதந்திர தினத்தன்று வருகை தந்த சுமார் 750 மாணவர்கள், 75 பெற்றோர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் என அனைவரும்
எனது நகரம் எனது பெருமை
உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
ஓசூர் மாநகராட்சி
தூய்மை ஓசூர் இயக்கத்திற்கான உறுதிமொழி
எனது நகரம் – எனது பெருமை
எனது நகரத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருப்பது
எனது கடமையும், பொறுப்புமாகும்.
எனது வீட்டிலோ, கடையிலோ உருவாகும் குப்பையை தரம் பிரித்து
மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் மட்டுமே கொடுப்பேன்.
பொது இடங்களில், தெருக்களில், கடைவீதிகளில், நீர்நிலைகளில்,
கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டவோ, எரிக்கவோ மாட்டேன்.
எனது சுற்றுப்புறத்தையும், நகரத்தையும், தூய்மையாக வைக்க
அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.
என்னை சார்ந்தவர்களையும் ஈடுபடுத்துவேன்.
எனது வீட்டிற்கு குப்பை பெற வரும் மாநகராட்சி தூய்மை
பணியாளர்களை கனிவுடனும், மரியாதையுடனும் நடத்துவேன்.
எனது வீட்டிலும், வெளியிலும் சுகாதார கழிப்பிடத்தை பயன்படுத்துவேன்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரியும் நெகிழியை உபயோகிக்கமாட்டேன்.
தூய்மையான ஓசூர் இயக்கத்திற்கான எனது பங்களிப்பை முழுமையாக அளிப்பேன் என உளமாற உறுதி கூறுகின்றேன்.
என்று கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நான்காவதாக பள்ளி அளவில் கலைத்திருவிழா நிகழ்ச்சிகள்
நடைபெற்றது
இந்த கலைத்திருவிழா 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
முதல் பிரிவு –
இதில் முதல் வகுப்பு மற்றும் 2-வது வகுப்பு மாணவ, மாணவிகளும்,
1. ஒப்புவித்தல் போட்டி – மழலையர் பாடல்(தமிழ்)
Tamil Rhymes Including ஆத்திச்சூடி.
2. கதை கூறுதல்.
3. வண்ணம் தீட்டுதல்.
4. ஒப்புவித்தல் போட்டி – மழலையர் பாடல் (ஆங்கிலம்)
5. மாறுவேடப் போட்டி.
6. களிமண் பொம்மைகள் செய்தல்.
ஆகிய போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றனர்.
இரண்டாவது பிரிவு -
இதில் 3, 4 & 5 - வது வகுப்பு மாணவ, மாணவிகளும்,
1. பேச்சுப்போட்டி.
2. திருக்குறள் ஒப்புவித்தல்.
3. மெல்லிசை – தனிப்பாடல்.
4. தேச பக்தி பாடல்கள்.
5. களிமண் பொம்மைகள் செய்தல்.
6. மாறுவேடப் போட்டி.
7. நாட்டுப்புற நடனம்(தனி).
8. நாட்டுப்புற நடனம்(குழு).
9. பரத நாட்டியம்(தனி).
10. பரத நாட்டியம்(குழு).
11. ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல்.
12. தனிநபர் நடிப்பு.
ஆகிய போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றனர்.
மூன்றாவது பிரிவு -
இதில் 6, 7 & 8 -வது வகுப்பு மாணவ,
மாணவிகளும்
வகை – 1 - கவின்கலை /நுண்கலை பிரிவில்
1. ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல்.
2. களிமண் சுதை வேலைப்பாடு
3. மணல் சிற்பம்.
4. ரங்கோலி.
வகை – 2 – இசை(வாய்ப்பாட்டு) பிரிவில்
5. செவ்வியல் இசை – தனிப்பாட்டு.
6. நாட்டுப்புற பாடல் – தனிப்பாட்டு.
7. வில்லுப்பாட்டு (குழு).
வகை – 3 – நடனம் - பிரிவில்
8. கிராமிய நடனம் (தனி).
9. கிராமிய நடனம் (குழு).
10. பரதநாட்டியம் (தனி).
11. பரதநாட்டியம்(குழு).
வகை – 4 – நாடகம் பிரிவில்
12. தனிநபர் நடிப்பு.
13. பாவனை நடிப்பு (தனி).
14. பலகுரல் பேச்சு
ஆகிய போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றனர்.
பாராட்டுச் சான்றிதழ்கள்
அனைத்து கலைத்திருவிழா நிகழ்ச்சிகளிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் விழாவில் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
79-வது சுதந்திர தினவிழா கலைத்திருவிழாவில்
முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு
1. American India Foundation(AIF).
2. Finance Academy(FA)
3. Surya Plastech(SP).
ஆகிய நிறுவனங்கள் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பரிசுகள்
மேலும் பரிசுகள் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை மாமன்ற உறுப்பினர் ரஜினிகாந்த் அவர்கள் வழங்கினார்.
79-வது சுதந்திர தினவிழா ஏற்பாடுகளை
தலைமையாசிரியர்
பொன்நாகேஷ்
சிறப்பாக செய்திருந்தார்.
79-வது சுதந்திர தினவிழாவில்
மாணவர்கள்,
பெற்றோர்,
ஆசிரியர்கள் மற்றும் பேடரப்பள்ளி பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.