கி\ருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் ஆய்வு
ஓசூர். அக். 16. –
“உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்”
சூளகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் அக்டோபர் 16-ம் தேதியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு
பிறப்பு,
வருமானம்,
இருப்பிடம்,
வாரிசு சான்று
உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள்
மற்றும்
மாற்றுத்திறனாளி
தேசிய அடையாள அட்டை
ஆகியவற்றை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
காமன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில்,
காமன்தொட்டி,
கானலட்டி
ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில்,
துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள், இன்று (16.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள், அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் மக்களைத் தேடி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன்
“உங்களுடன் ஸ்டாலின்”
என்ற திட்டத்தை 15.07.2025 அன்று துவக்கி வைத்ததையடுத்து,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
"உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள்
15.07.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களில்
நகர்ப்புறங்களில்
13 துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும்,
ஊரகப் பகுதிகளில்
15 துறைகளைச் சேர்ந்த
46 சேவைகளும்
வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முகாம்களிலும்,
மருத்துவ முகாம்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அரங்கு,
இ-சேவை மையம்,
ஆதார் மையம்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கான அரங்கு
உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இம்முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு
45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், விண்ணப்பம் அளித்த பயனாளிகளுக்கு உடனடி நடவடிக்கையாக,
பிறப்பு சான்றிதழ்,
சாதி சான்றிதழ்,
விதவை சான்றிதழ்,
வாரிசு சான்றிதழ்,
வருமானச் சான்றிதழ்,
மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கு
மாற்றுத்திறனாளி
தேசிய அடையாள அட்டை
ஆகியவற்றை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
தனி வட்டாட்சியர்
திரு.கோகுல்நாத்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திரு.கார்த்தி
மற்றும் மு.உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------------.