தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
ஓசூர் பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளியில்
துளிர் திறனறிதல் தேர்வு (டிடிடி)
ஆர்வத்துடன் பங்கேற்ற
250 மாணவ, மாணவிகள்
ஓசூர். ஜனவரி. 09. -
திருக்குறள்
கல்வி
“தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு”
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஓசூர் பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளியில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
துளிர் திறனறிதல் தேர்வு(டிடிடி) நடைபெற்றது.
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம் பேடரப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி
இயங்கி வருகிறது. இப்பள்ளியில்
900 மாணவ, மாணவிகள் ஒன்று முதல்
எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில
வழியில் கல்வி பயின்று வருகின்றனர்.
துளிர் திறனறிதல் தேர்வு (டிடிடி)
இந்த அரசுப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட துளிர் திறனறிதல் தேர்வில் நான்காம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள்.
இந்த தேர்வு மையத்தில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
பொறுப்பாளர்கள்
சத்யமூர்த்தி
முருகேச பாண்டியன்
ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டு
சந்தாவாக, 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.60-ம், 6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.200-ம் பெற்று, மாதமொரு முறை தமிழ் மொழியில் “விஞ்ஞான துளிர்” என்னும் மாத இதழையும், மற்றும் ஆங்கில மொழியில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை “ஜந்தர் மந்தர்” என்னும் இதழையும் வழங்கி மிகச்சிறந்த கல்வி அனுபவங்களையும் மாணவர்களுக்கு வழங்கியும், திறனறிதல் தேர்வு நடத்தி வெற்றி பெறும் மாணவ, மாணவிகளை அறிவியல் சுற்றுலா அழைத்துச் சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைமையாசிரியர் பொன்நாகேஷ்
ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதலோடு நடைபெற்ற இத்தேர்வை தலைமையாசிரியர் பொன்நாகேஷ் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.