இனம்,
மதம்,
பாலினம்,
வயது,
பாலியல் சார்பு,
அல்லது வேறு எந்த குணவியலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களாலும் அனுபவிக்கும் உலகளாவிய இயந்திரம்
மிதிவண்டி
ஜூன் – 3 –
உலக மிதிவண்டி நாள்
(World Bicycle Day)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜுன். 3. –
2025ஆம் ஆண்டின் கருப்பொருளான
“நிலையான எதிர்காலத்திற்கான சைக்கிள் ஓட்டுதல்” “Cycling for a Sustainable Future”,
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்,
மன நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் மிதிவண்டியின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது
உலக மிதிவண்டி நாள்
(World Bicycle Day)
ஆண்டுதோறும் சூன் 3-ம் நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம்
"இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு,
நீண்டகாலப் பயன்பாடு,
பல்திறன்,
மற்றும்
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற
ஒரு எளிமையான,
மலிவான,
நம்பகமான,
சுத்தமான போக்குவரத்துக் கருவி"
என்பதை அங்கீகரித்தது.
உடற்பயிற்சி சாதனம்
ஒரு காலத்தில் போக்குவரத்துக்கு முக்கியச் சாதனமாக இருந்த மிதிவண்டி, தற்போது பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறிவிட்டது.
சமீபகாலமாக மிதிவண்டி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.
வரலாறு
பதினேழாம் நூற்றாண்டில் பொழுதுபோக்காக பிரான்ஸைச் சேர்ந்த
கோம்டி மீடி டீ ஷிவ்ராக்
(Comte mede de Sivrac)
உருவாக்கியது தான் சைக்கிள்.
இரண்டு மரத்துண்டுகளை வைத்து விளையாட்டுத்தனமாக சைக்கிளுக்கு அவர் உருவம் கொடுத்தார்.
அப்போது அவருக்குத் தெரியாது, பின்னாளில் இது பூமிக்கு எவ்வளவு தேவையான பொருளாக உருமாறப் போகிறது என்று.
தான் உருவாக்கிய அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, 1791ம் ஆண்டு
மரச்சைக்கிள்
ஒன்றை உருவாக்கினார் கோம்டி.
இந்த சைக்கிளுக்கு பெடல்கள் கிடையாது. காலால் தரையை உந்தித் தள்ளி தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும்.
அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார் பிரான்ஸைச் சேர்ந்த
எர்னெஸ்ட் மிசாக்ஸ்
(Ernest Michaux).
அவரது தீவிர உழைப்பின் பலனாக
1863-ஆம் ஆண்டு
கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ்
கொண்டு வடிவமைக்கப்பட்ட
மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார்.
முந்தைய சைக்கிள்களை விட
மிசாக்ஸ்
கண்டுபிடித்த சைக்கிளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் அதனை பயன்படுத்தும் முறை எளிதாக்கப்பட்டது தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த
லெசுச்செக் சிபிலிசுக்கி
என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார்.
இம்முயற்சிக்கு
துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன.
மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய செய்தியாகும்.
சிறப்பு
உலக மிதிவண்டி நாள்
இனம்,
மதம்,
பாலினம்,
வயது,
பாலியல் சார்பு,
அல்லது வேறு எந்த குணவியலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களாலும் அனுபவிக்கும் உலகளாவிய இயந்திரம் ஆகும்.
உலக மிதிவண்டி நாள்
தற்போது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை
ஊக்குவிப்பதில்
ஈடுபட்டு வருகிறது.
-------------------------------------------------------------------------------.