கல்வியில் சிறந்த தமிழ்நாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
2022-2025 ஆம் கல்வி ஆண்டுகளில்
10,758 மாணவிகளுக்கு
புதுமைப்பெண்
திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000,
2024-2025 -ஆம் கல்வியாண்டில்
10,044 கல்லூரி மாணவர்களுக்கு
தமிழ்ப்புதல்வன்
திட்டத்தின் கீழ், ரூ.1000
வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
ஓசூர். செப். 25. -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்
அவர்கள்,
மாண்புமிகு தெலுங்கான முதலமைச்சர்
திரு.அ.ரேவந்த் ரெட்டி
அவர்கள்
25.09.2025 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்,
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு”
என்னும் கருப்பொருளில்,
தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சி கொண்டாட்ட விழாவில்,
2025- 26 ஆம் கல்வி ஆண்டிற்கான
"புதுமைப்பெண்”
மற்றும்
"தமிழ்ப்புதல்வன்
திட்டங்களை தொடங்கி வைத்தனர்.
அந்த நிகழ்ச்சி தொடர்ந்து
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
காணொளிக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்
அவர்கள்
ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து
4,140 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000
மற்றும்
முதலாம் ஆண்டு படிக்கும் 4,574 கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன்
திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000
வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கான பற்று அட்டைகளை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் தலைமையிலான அரசு,
கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்,
நான் முதல்வன் திட்டம்,
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும்
"புதுமைப் பெண்” திட்டம்,
கல்லூரி மாணவர்களுக்கு
"தமிழ்ப்புதல்வன்” திட்டம்
உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை
அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ / மாணவிகளுக்கும்
மற்றும்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கும்
மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் 05.09.2022
மற்றும்
தமிழ்ப்புதல்வன் திட்டம் 09.08.2024 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுமைப் பெண் திட்டத்தில்...
2022-23 ஆம் கல்வியாண்டில் 3,851 மாணவிகளும், 2023 - 2024 -ஆம் கல்வியாண்டில் 7,644 மாணவிகளும், 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10,758 மாணவிகளும், பயன்பெற்று வருகின்றனர்.
அதேபோல
தமிழ்ப்புதல்வன் திட்டத்தில்...
2024-2025 -ஆம் கல்வியாண்டில் 10,044 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து,
செப்.25-ம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியை
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு”
என்னும் கருப்பொருள் கொண்டாட்ட நிகழ்வில்
2025-26-4 ஆண்டிற்கான “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களை துவக்கி வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
2025-26 -ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு படிக்கும் 4,140 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000
மற்றும்
முதலாம் ஆண்டு படிக்கும் 4,574 கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000
வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
மேலும்,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்
அவர்கள்,
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காணொளிக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்ட கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி.சக்தி சுபாசினி,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ)
திரு.முனிராஜ்,
இந்தியன் வங்கி முன்னோடி மேலாளர்
திரு.சரவணன்,
அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர்
முனைவர்.அனுராதா,
அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் (பொ)
திருமதி.உமா,
வட்டாட்சியர்
திரு.சின்னசாமி
மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்,
கல்லூரி மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டனர்.
------------------------------------------.