கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் மலர் சந்தையில்
ஆயுத பூஜை –
விஜயதசமி -
முன்னிட்டு மலர்களின் விலை
பல மடங்கு உயர்வு
விவசாயிகள் மகிழ்ச்சி
ஓசூர்.செப். 01. -
ஓசூர் மலர் சந்தையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சாமந்திப்பூ, பட்டன்ரோஜா, மல்லிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை இரண்டு முன்று மடங்கு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர்,
தளி,
கெலமங்கலம்,
தேன்கனிக்கோட்டை
உள்ளிட்ட பகுதிகளில் இதமான தட்பவெட்பநிலை மற்றும் மண்வளம் காரணமாக
ரோஜா,
பட்டன்ரோஜா,
மல்லிப்பூ,
சாமந்திப்பூ,
கனகாம்பரம்,
சம்பங்கி
மற்றும்
அலங்காரப்பூக்களான
கார்னேஷன்,
ஜெர்பரா
உள்ளிட்ட 30 வகையான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளையும் வாசமிக்க தரமான மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இப்பகுதியில்
பசுமைக்குடில் அமைத்தும் மற்றும்
திறந்த வெளியிலும் சொட்டுநீர் பாசனம் முறையில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த மலர் சாகுபடியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளையும் மலர்கள் ஓசூர் மலர்ச்சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, விற்பனைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆயுத பூஜை
விஜயதசமி
தற்போது ஓசூர் மலர்ச்சந்தையில் அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை
மற்றும் 2-ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு மலர்களின் விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக
ஒரு கிலோ சாமந்திப்பூவின் விலை ரூ.200லிருந்து ரூ.400 வரை
விலை அதிகரித்துள்ளது.
மலர்களின் விலை உயர்ந்து வருவதால், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட
ஒரு கிலோ சாமந்திப்பூவின் விலை ரூ.400 என விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
அதேபோல
ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை ரூ.400-லிருந்து ரூ.800 வரையும்,
ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.600-லிருந்து ரூ.1800 வரையும்,
ரூ.120-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டன் ரோஜா விலை ரூ.400 வரையும்,
சம்பங்கி - ரூ.120-லிருந்து ரூ.300-க்கும்,
முல்லை - ரூ.300-லிருந்து ரூ.800-க்கும்,
அரளிப்பூ ரூ.150லிருந்து ரூ.300-க்கும்,
செண்டுமல்லி ரூ.30லிருந்து ரூ.80க்கும்,
என அனைத்து மலர்களின் விலையும் இரண்டு மடங்கு மற்றும் மூன்று மடங்கு வரை விலை அதிகரித்துள்ளது.
இந்த பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்புள்ளதாக மலர்சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஓசூர் மலர்ச்சந்தையில் மலர்களை வாங்கிச் செல்ல ஓசூர் பகுதி சிறு மலர் வியாபாரிகள் மட்டுமன்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மலர் வியாபாரிகளும் வருகின்றனர்.
இதில் பெங்களூரு நகரைச் சேர்ந்த சிறு வியாபாரிகளே அதிகளவில் வந்து மலர்களை வாங்கிச் செல்கின்றனர்.
நடப்பாண்டு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு ஓசூர் மலர் சந்தையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளிலிருந்து மலர் வியாபாரிகளும், கர்நாடக மாநில எல்லையில் உள்ள சில்லரை வியாபாரிகளும் பூக்கள் வாங்க திரண்டிருந்தனர்.
------------------------------------.