ஓசூர் பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
பள்ளி மேலாண்மைக்குழு சார்பில்
சமத்துவ பொங்கல் விழா
ஓசூர். ஜனவரி. 14 –
திருக்குறள்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
பள்ளி மேலாண்மைக்குழு
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பேடரப்பள்ளியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில்
பள்ளி மேலாண்மைக்குழு சார்பில்
சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பேடரப்பள்ளி
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 900 மாணவ, மாணவிகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்று வருகின்றனர்.
ஒரு தலைமையாசிரியர் உட்பட 22 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்
தனியார் பள்ளிக்கு
நிகரான அரசுப்பள்ளி
இந்த அரசுப்பள்ளியில்
மாணவர்களுக்கு
தரமான கல்வி வழங்குதல்,
மாணவர்களிடையே நல்ல ஒழுக்கத்தை பேணிக்காப்பது,
பள்ளியை சுகாதாரமான சூற்றுச் சூழலில் பராமரிப்பது,
என தனியார் பள்ளிக்கு நிகராக இந்த அரசுப்பள்ளி பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும்
மாணவர்கள் எண்ணிக்கை
அதிகரிப்பு
இதனால் இந்த அரசுப்பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த அரசுப்பள்ளியில் தங்களுடைய குழந்தைகளை சேர்க்க பெற்றோரும்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் மாவட்டத்திலேயே
அதிக மாணவர்கள் படிக்கும் அரசு நடுநிலைப்பள்ளிகளில் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி முன்னணியில் திகழ்கிறது.
சமத்துவ பொங்கல் விழா
இந்த அரசுப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா ஜனவரி 13-ம் தேதி போகிப்பண்டிகை தினமான நேற்று கொண்டாடப்பட்டது.
பாரம்பரிய முறையில்
சமத்துவ பொங்கல்
சமத்துவ பொங்கல் விழாவுக்காக பள்ளி வளாகத்தில் வண்ணமயமான கோலமிட்டு சுற்றிலும் கரும்புகளுடன், புதுஅடுப்பில், புதுப்பானை வைத்து பாரம்பரிய முறையுடன் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
பள்ளி மேலாண்மைக்குழு
தலைவி விஜி
தலைமையில் நடந்த இந்த சமத்துவ பொங்கல் விழாவில்
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
பள்ளிக்கு வருகை தந்த 650 மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் செய்து பரிமாறப்பட்டது.
தலைமையாசிரியர்
பொன்நாகேஷ்
அனைவரும் மகிழ்ச்சியோடு சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் சாப்பிட்டனர்.
இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்
ஜெயலட்சுமி
ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல் ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பொன்நாகேஷ்
சிறப்பாக செய்திருந்தார்.