கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை
உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோயிலின்
தேர் திருவிழா முன்னிட்டு
பால் கம்பம் நடும் விழா
தேர்க்கமிட்டி குழு தலைவர்
திரு. K.A. மனோகரன்
Ex.MLA.
அவர்கள்
சந்திரசூடேஸ்வரர் கோயில்
செயல் அலுவலர்
திரு. சின்னசாமி,
அவர்கள் ஆகியோர்
பங்கேற்பு
ஓசூர். ஜன. 30. -
சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேர்த்திருவிழா
பால்கம்பம் நடும் விழா
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் வரும் மார்ச் 3-ம் தேதியன்று தேர்த்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் உள்ள தேர்ப்பேட்டை மலை மீது பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான
இந்த கோயிலில் ஆண்டுதோறும்
மார்ச் மாதம் தேர்த்திருவிழா
வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.
இந்த திருவிழாவில்
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா
ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.
மார்ச் 3-ம் தேதி தேர்த்திருவிழா
இந்த ஆண்டுக்கான
தேர்த்திருவிழா தேரோட்டம்
வரும் மார்ச் மாதம், 3 ம் தேதி
நடைபெற உள்ளது.
பால் கம்பம்
அதனைத் தொடர்ந்து தேர்ப்பேட்டையில்
உள்ள பெரிய தேர் உட்பட
3 தேர்களுக்கும் சிறப்பு பூஜைகள்
நடத்தப்பட்டு, ஊர் பொதுமக்கள் மற்றும்
கோயில் கமிட்டி தலைவர்,
உறுப்பினர்கள் முன்னிலையில்
'பால்கம்பம்' நடப்பட்டது.
முன்னதாக
ஓசூர் முன்னாள் எம்எல்ஏவும்,
தேர்க்கமிட்டி தலைவருமான
திரு.கே.ஏ.மனோகரன்.
தலைமையில் சிறப்பு பூஜைகள்
நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஊர்கவுண்டர்கள் பால்கம்பத்துடன் தேர்ப்பேட்டையை
சுற்றிலும் வலம் வந்து தேரின் மேல்
பால்கம்பம் நடப்பட்டு,
தேர்களின் சக்கரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜைகளை
தலைமை அர்ச்சகர்
திரு. வாச்சீஸ்வரன்
நடத்தினார்.
சந்திர சூடேஸ்வரர் கோயில்
தேர்த்திருவிழா தேரோட்டம்
2026- மார்ச் 3-ம் தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
அன்றைய தினம்
சந்திர கிரகணம் ஏற்படுவதால்,
வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் தேரோட்டம்,
இந்த முறை அதிகாலை 5:30 மணிக்கே தொடங்குகிறது.
இந்த தேரோட்டத்தில்
மதியம் 1:30 மணிக்குள் மூன்று தேர்களும்
நிலை வந்து சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மதியம் 2:00 மணிக்கு
கோயில் நடை சாத்தப்படுகிறது.
கிரகணம் முடிந்த பின் மறுநாள்
அதிகாலை 4:30 மணிக்கு
மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில்
சந்திரசூடேஸ்வரர் கோயில்
செயல் அலுவலர்
திரு. சின்னசாமி,
பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர்
திரு. நாகராஜ்,
மாநகர கவுன்சிலர்
திருமதி. கிருஷ்ணவேணி ராஜி,
மற்றும்
தேர்க்கமிட்டி உறுப்பினர்கள்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
----------------------------------.