யுரேனஸ் கோள், அதன் இரண்டு துணைக் கோள்கள், அற்புத காலக்ஸிகள்,
நிபுளாக்கள், ஆகியவற்றைக் கண்டு பிடித்து உலகை வியக்கச் செய்த சாதனையாளர்
வில்லியம் ஹெர்ச்செல்
மார்ச் - 13 – 1781 -
வில்லியம் ஹெர்ச்செல்
யுரேனஸ் கோளைக்
கண்டுபிடித்த நாள்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 13. –
சூரிய மண்டலம்
1781 ஆம் ஆண்டு வரை
சூரிய மண்டலம்
ஆறாவது அண்டமான
சனிக்கோளுடன் முடிவதாக எண்ணப்பட்டது.
விண்ணியல் விஞ்ஞானி
வில்லியம் ஹெர்ச்செல்
அந்த ஆண்டில் இன்னிசை ஞானியும், விண்ணியல் ஆரம்பநிலை விஞ்ஞானியும் [Amateur Astronomer] ஆன வில்லியம் ஹெர்ச்செல் என்பவர்,
புதிய அண்டக்கோள்
கண்டுபிடிப்பு
யாருமே நினைத்துப் பாராதவாறு சனிக் கோளுக்கும் அப்பால் பரிதியைச் சுற்றி வரும் ஒரு புதிய அண்டக்கோள் நகர்ச்சியைக் கண்டு, வானியல் வரலாற்றில் ஒரு மாபெரும் வியப்புணர்ச்சியை உண்டாக்கினார்!
பரிதியிலிருந்து சனிக்கோள் சுற்றி வரும் தூரத்தை விட, இரண்டு மடங்கு தொலைவில் சுற்றி வந்ததால், எவரது தொலைநோக்கியும் அதுவரைப் புதுக்கோளைக் காணவில்லை! அத்துடன் ஹெர்ச்செல் பயன்படுத்திய புதிய தொலைநோக்கி மிகக் கூர்மையும், கையாளும் திறமையும் கொண்டதாக இருந்தது!
பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சம்
ஓர் பெரும் வெடிப்பில் தோன்றி
15 பில்லியன் ஆண்டுகள்
ஓடி விட்டன என்று
வானியல் வல்லுநர்
முடிவு செய்துள்ளார்கள்!
காலிலியோ
தான் படைத்த முதல் தொலைநோக்கியின் வழியே விண்வெளியின் திரையை நீக்கிய காலிலியோ (1564-1642), பூமியின் நிலவைப் போல வெள்ளிக் கோளின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி ஆகியவற்றைக் கண்டார்! வியாழனின் துணைக் கோள்களைக் கண்டார்.
நெப்டியூன்
முதன்முதல் சனிக் கோளின் நீள் வடிவத்தைக் கண்டார்! யுரேனஸ் புறக்கோளுக்கு அப்பால் நகரும் நெப்டியூன் [Neptune] கோளைக் கண்டாலும், அது ஒரு பரிதி மண்டலக் கோள் என்பதைக் காலிலியோ அறியாது தவற விட்டுவிட்டார்!
காலிலியோ
ஹியூஜென்,
நியூட்டன்,
காஸ்ஸினி
ஆகியோரைப் பின்தொடர்ந்து,
வில்லியம் ஹெர்ச்செல்
தொலைநோக்கியைச் செம்மையாக்கி, மேம்படுத்திப் பெரிதாக்கி
புதுக் கோள் யுரேனஸ், அதன் இரண்டு துணைக் கோள்கள், அற்புத காலக்ஸிகள் [Galaxies], ஆயிரக் கணக்கான நிபுளாக்கள் [Nebulae] ஆகியவற்றைக் கண்டு பிடித்து உலகை வியக்கச் செய்தார்.
அத்துடன் சனிக்கோளின் அடுத்த இரண்டு சந்திரன்களைத் தனது தொலைநோக்கி மூலம்
கண்டு பிடித்தார், ஹெர்ச்செல்.
1781 மார்ச் 13 ஆம் தேதி
வில்லியம் ஹெர்ச்செல்
தொலைநோக்கி வழியே
விண்மீன்களை
உளவி வரும் போது
ஓர் மங்கலான
அண்டத்தைக் கண்டார்.
நீல நிறத் தட்டு
அது என்னவென்று
துருவி நோக்க கருவியின்
கூர்மையை மிகைப்படுத்திப்
பார்க்கும் போது ஒரு தெளிவான
நீல நிறத் தட்டு தெரிந்தது.
முதலில் அது ஒரு
வால்மீன் [Comet] என்று கருதினார். வால்மீன்கள்
விண்மீன்களைப் பின்புலமாக்கிப் பரிதியைச் சுற்றுபவை.
ஆனால் புதுக் கோள் நகர்ச்சியை அவர் தொடர்ந்து நோக்கும் போது, அதன் புதிய இடம் அண்டையில் இருக்கும் விண்மீன்களின் இருக்கைக்கு ஒப்பிய தூரத்தில் மாறியது.
அவ்விதம் அதன் போக்கைப் பொறுமையாக நீண்ட காலம் ஹெர்ச்செல் பதிவு செய்ததில், அதன் நகர்ச்சி வால்மீனின் போக்கை ஒத்திருக்க வில்லை! புதுக்கோளின் சுற்றும் வீதி ஏறக் குறைய வட்ட வீதியில் [Circular Orbit] காணப் படவே, அது பரிதியைச் சுற்றும் மற்றுமோர் அண்டக்கோள் என்பதை ஹெர்ச்செல் முடிவு செய்தார்.
புதுக்கோள் கண்டு பிடிப்பதற்கு
முன்பு 90 ஆண்டுகளாய்ப்
பல வானியல் வல்லுநரின்
கண்ணில் அது
தென்பட்டிருந்தாலும்,
அதை ஒரு விண்மீன்
என்று கருதினார்!
பரிதி மண்டலக் கோள்
அது என்பதைப்
பலர் அறியத் தவறி விட்டார்கள்! யுரேனஸைக் கண்டு பிடித்த ஹெர்ச்செல்லின் கூரிய விழிகள் அவரைச் சிறந்ததொரு
வானோக்காளர் என்பதை நிலைநாட்டியது.
யுரேனஸ் கோள்தான் மனிதர் தொலைநோக்கி மூலம்,
முதன் முதலில்
கண்டு பிடிக்கப்பட்ட
சூரிய மண்டலக் கோள்!
யாவரும் அறிந்த
புதன்,
வெள்ளி,
செவ்வாய்,
வியாழன்,
சனி
ஆகிய பண்டைக் கோள்களை யார் முதலில் கண்டு பிடித்தார் என்பது எந்த வரலாற்றிலும் காணப் படவில்லை!
நமது இந்து ஜோதிடக் கணிப்பில், கிரேக்க ஜோதிட ஞானத்தில்
மேற்கூறிய கோள்கள் யாவும்
பல்லாயிர ஆண்டுகளாகக்
கையாளப் பட்டு வருகின்றன!
1738 நவம்பர் 15 ஆம் தேதி வில்லியம் ஹெர்ச்செல் ஜெர்மனியில் ஹானோவர் என்னும் ஊரில் பிறந்தார். அவரது பெற்றோர் இருவரும் இசை ஞானிகள்.
அவ்வழிப் பிறப்பில் வில்லியம் ஹெர்ச்செல்லிடம் புகுந்து இன்னிசைத் தானாக அவர்பால் குடிகொண்டது.
1757 இல் பத்தொன்பது வயது வந்ததும், வில்லியம் ஹெர்ச்செல் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டார்.
அவருக்குப் பிறகு அவரது தனயன் அலெக்ஸாண்டர், தங்கை கரோலின் பிரிட்டனுக்கு வந்து அவருடன் இணைந்தார்கள்.
பிரிட்டனில் வில்லியம்
இசைக்கலையை விருத்தி செய்து, இசைப்பயிற்சி ஆசிரியராகவும், இராணுவப் பாண்டு வாத்தியக் குழுவினராகவும் பணியாற்றினார்.
இசைக்கலையில் மூழ்கிச் சிறப்புற்ற வில்லியத்துக்குத் திடீரென
வானியல் துறையில் ஆர்வம் பொங்கி, பிறகு அதுவே அவரது தலையாய வேட்கை ஆயிற்று! முதலில் தொலைநோக்கியை வாடகைக்கு எடுத்து வான மண்டலத்தை ஆராய்ந்தார்.
பிறகு அலெக்ஸாண்டர், கரோலினுடன் சேர்ந்து மூவரும்
48 அங்குல ஒளிப்பிம்ப
40 அடிக் குவிநீளத்
தொலைநோக்கியை
[48 ‘ Reflector,
40 ‘ Focul Length Telescope] உருவாக்கினார்கள்.
அதை டிசைன் செய்து முடிக்கப்
பேரரசர் மூன்றாம் ஜார்ஜின்
[King George III]
6600 US டாலர்
நிதி உதவி கிடைத்தது.
20 அடி நீளத் தொலைநோக்கி
ஆனால் அவரது மகத்தான கண்டு பிடிப்புகளுக்கு அவரது 20 அடி நீளத் தொலைநோக்கியே அவருக்கு முதலில் உதவி புரிந்தது!
வில்லியம் ஹெர்ச்செல்
வானோக்கி உளவும் போது, அண்டக் கோள்களையும், பால்மய மின்மினிகளையும்
முறைப்படிப் பதிவு செய்து, சீரான ஒழுங்கில் ஆய்வு செய்பவர்.
யுரேனஸ் கண்டுபிடிப்பு
1781 மார்ச் 13 ஆம் தேதி அன்று தனது 7 அங்குல ஒளிபிம்பத் தொலை நோக்கியில் யுரேனஸ் புதுக்கோளைக் கண்டு, பல ஆண்டுகள் அதன் நகர்ச்சியைப் பதிவு செய்து, சனிக்கோளுக்கும் அப்பால் அது ஏறக்குறைய வட்ட வீதியில் சுற்றி வருவதைக் கணித்தார்.
ஹெர்ச்செல் புதுக்கோளுக்கு முதலில் இட்ட பெயர்
‘ஜியார்ஜியம் சைடஸ் ‘
[Georgium Sidus].
பேரரசர் ஜார்ஜ் மன்னரின் நினைவாக அப்பெயரை அளித்தார்.
வானியல் குழு
[Astronomical Society]
அவரிட்ட பெயரை ஏற்றுக் கொள்ளாது, புதுக்கோளை ‘யுரேனஸ் ‘ என்று கிரேக்க இதிகாசக் கடவுள் பெயரால் பின்னாள் அழைத்தது.
-------------------------------------------------.