மாநில அளவிலான
கலைத்திருவிழா போட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பள்ளிக்கல்வித்துறை சார்பில்
அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில்
6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
பசுமையும் பாரம்பரியமும் –
என்ற மையக் கருத்தில்
மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி
மற்றும்
76 வது அரசியலமைப்பு தினம்
உறுதிமொழி ஏற்பு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
ஆகியோர் பங்கேற்பு
ஓசூர். நவ. 26. –
மாநில அளவிலான
கலைத்திருவிழா போட்டி
ஓசூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில்
அரசுப்பள்ளிகளில் 6-வது வகுப்பு முதல்
8-வது வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
பசுமையும் பாரம்பரியமும் –
என்ற மையக் கருத்தில்
மாநில அளவிலான
கலைத்திருவிழா போட்டி
மற்றும்
76 வது அரசியலமைப்பு தினம்
உறுதிமொழி ஏற்பு
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி
வளாகத்தில் நவ. 26-ம் தேதி
நடந்த கலைத்திருவிழா போட்டிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்
திரு.வை. குமார்.
துணை மேயர்
திரு. ஆனந்தய்யா
கிருஷ்ணகிரி மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்
திரு.ஆர். மதன்குமார்
ஆகியோர் குத்துவிளக்கேற்றி
தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும்
மாநில அளவிலான
கலைத்திருவிழா போட்டிகளை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு மாநில அளவிலான
கலைத் திருவிழா போட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான்
பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இக்கலைத்திருவிழா நான்காவது ஆண்டாக நடைபெறுகிறது.
2,308 மாணவ, மாணவிகள்,
ஓசூர் கலைத்திருவிழாவில்,
மாநிலம் முழுவதும்
38 மாவட்டங்களைில் இருந்து
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளைச் சேர்ந்த 6-வது வகுப்பு முதல்
8-வது வகுப்பு வரை பயிலும்
524 மாணவர்கள்,
1,784 மாணவிகள்
என மொத்தம் 2,308 மாணவ, மாணவிகள்,
பங்கேற்றனர்.
கலையரசன் மற்றும்
கலையரசி பட்டம்
கலைத்திருவிழா போட்டி
பிரிவுகள்
ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல்,
களிமண் சுதை வேலைப்பாடு,
மணல் சிற்பம்,
ரங்கோலி,
செவ்வியல் இசை தனிப்பாட்டு,
நாட்டுப்புற பாடல் - தனிப்பாட்டு,
வில்லுப்பாட்டு,
கிராமிய நடனம்
(தனி மற்றும் குழு),
பரதநாட்டியம்
(தனி மற்றும் குழு),
தனி நபர் நடிப்பு,
பாவனை நடிப்பு,
பலகுரல் பேச்சு
ஆகிய கலை பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
இதில்
6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவிகள்
ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுடைய
திறமைகளை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும்
மாணவர்கள்
தமிழக முதல்வர் மூலம்
கலையரசன் மற்றும்
கலையரசி பட்டம் பெற உள்ளனர்.
76 வது அரசியலமைப்பு தினம்
உறுதிமொழி ஏற்பு
முன்னதாக
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில்
76 வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு,
இந்திய அரசியலமைப்பு முகவுரை குறித்த
உறுதிமொழியினை
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்,
ஓசூர் மாநகராட்சி மேயர்,
பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர்,
பள்ளி தலைமையாசிரியர்கள்,
ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்
ஆகியோர் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட கல்வி அலுவலர்கள்
திருமதி.ஆர்.வி.ரமாவதி,
திரு.நா.ராஜன்,
திரு.சி.சிவராமன்,
திரு.டி.கிருஷ்ணன்,
திரு.சி.கே.கோபாலப்பா,
மாநில ஆலோசகர்
திரு.எஸ்.ஜனார்தனன் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை),
அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர்
மரு.ஆர்.ராதாகிருஷ்ணன்,
உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.மகேந்திரன்,
பள்ளி ஆய்வாளர்
திரு.ஜெயராமன்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர்
திரு.வெங்கடேசன்,
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ,
மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்
கலந்து கொண்டனர்.
---------------------------------------.