நேற்றைய வரலாறு - இன்றைய பாடம்
------------------------------------------------------
உலகின் மிகப் புகழ் வாய்ந்த
நாடக ஆசிரியரும்,
ஆங்கிலக் கவிஞருமான
சாதனையாளர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்
1595 - ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் 29 - ஆம் தேதியில்
வில்லியம் ஷேக்ஸ்பியரின்
ரோமியோ ஜூலியட்
என்ற துன்பியல் நாடகம் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜனவரி. 29. -
வில்லியம் ஷேக்ஸ்பியர்
ரோமியோ ஜுலியட்
நாடகம் அறங்கேற்றம்
ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும், உலகின் மிகப் புகழ் வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுபவர். இவர் இயற்றிய ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதியில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது.
உலகின் அனைத்து மொழிகளிலும்
மொழி பெயர்ப்பு
இவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், 2 நெடும் விவரிப்பு கவிதைகள் மற்றும் பல பிற கவிதைகளும் அடங்கும். இவருடைய நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
பிரபல நகைச்சுவை நடிகர்
கெம்பே பீட்டர்,
ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம். இந்த நாடகத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான கெம்பே பீட்டர், வேலைக்காரன் வேடம் ஏற்றிருந்தார்.
ரோமியோ ஜூலியட் கதை காலம் கடந்த காதல் கதை.
உலகில் மொத்தம் பத்து காதல் கதைகளை பட்டியலிட்டால் அதில் இந்த ரோமியோ ஜூலியட் கதை கண்டிப்பாக இடம் பெறும்.
இரண்டு தனிக்குடிகளுக்கு இடையில் உள்ள பகைமை இரண்டு காதலர்களை வாழ்வில் ஒன்று சேரவிடாமல் மரணத்தில் ஒன்று சேர்க்கும் கதை. .
ஷேக்ஸ்பியரின் வாழ்நாளுக்குள் இரண்டு முறை இந்த நாடகம் நூல் வடிவில் அச்சேறியது, மிகப் பெரிய சாதனை.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அச்சுக்கலை இப்போது இருப்பதை போல நவீன தொழில்நுட்பத்துடன் இருக்கவில்லை.
இதில் வரும் மேல்மாடக் காட்சி இன்றளவில் பெரிதும் ரசிக்கப்பட்டும், பலரது கற்பனைக்கு ஒரு உந்துதலாகவும் இருந்து வருகிறது.
------------------------------------------.