கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
பொது சுகாதார குழு கூட்டம்
மாநகரில் மண்டலத்திற்கு
ஒரு நாய் தங்குமிடம் அமைப்பு உட்பட
7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மார்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு
உறுதி மொழி ஏற்பு
ஓசூர். அக்.17. -
பொது சுகாதார குழு கூட்டம்
ஓசூர் மாநகராட்சியில் நடந்த பொது சுகாதார குழு கூட்டத்தில் மண்டலத்திற்கு ஒரு நாய் தங்குமிடம் அமைப்பது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி கூட்டரங்கில் அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு
மாநகர சுகாதாரக் குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்
தலைமை வகித்தார்.
ஆணையர் ஷபீர் ஆலம்,
மாநகர நல அலுவலர்
டாக்டர். அஜீதா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.
இந்த கூட்டத்தில்
பொது சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன்
பேசும் போது :-
மாநகராட்சி பகுதிகளில் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்சிகளில் பிளாஸ்டிக் பேப்பர் மூலம் செய்யப்பட்ட வாழை இலைகளில் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.
தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் மூலம் உணவு கட்டிக்கொடுக்கப்படுகிறது.
இதில் உணவு சாப்பிடும் பொதுமக்கள், நேரடியாக பாதிக்கப்பட்டு கேன்சர் நோய் வரவாய்ப்புள்ளது.
இதனை தடுக்க வேண்டும்.
தொடர்ந்து பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்கணித்து பறிமுதல் செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் குடோன்கள் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியும் ஆனால் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
மேலும் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் தெருநாய்கள் குழந்தைகளை கடித்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும் அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தர்கா ஏரியில் கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க அப்பகுதியில் சூரியசக்தி மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி கண்காணித்து தடுக்க வேண்டும்.
ராமநாயக்கன் ஏரியில் தனியார் மருத்துவமனை கழிவுகள் நேரடியாக திறந்து விடுவதை தடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனையில் கழிப்பறைகள் தூய்மை இல்லாமல் உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும்.
மற்றும்
பார்வதி நகர்,
மத்திகிரி
உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில்
டெங்கு பரவாமல் தடுத்து கண்காணிக்க வேண்டும் எனக்கூறினார்.
ஆணையர் ஷபீர் ஆலம் :-
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுத்து முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியாக மாற்ற வேண்டும்.
டெங்கு பரவலை தடுக்க சாதாரண காய்சல் வந்தாலும் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணிக்க வேண்டும்.
நாய் கடித்தால் ரேபீஸ் தடுப்பூசி தொடர்ந்து செலுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிகளில் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க வேண்டும்.
அதனையும் மீறி கால்நடைகளை சாலைகளில் கழற்றிவிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்து கால்நடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கூறினார்.
கால்நடை பராமரிப்பு துறையினர் பேசும் போது :-
மாநகராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகநாய்கள் உள்ளது.
இந்த நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக 5400 தடுப்பூசிகள் உள்ளது.
நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இரண்டு நிமிடம் போதும். ஆனால் நாய்களை பிடிப்பதற்கு 2 மணி நேரம் ஆகிறது.
ஒரு நாளைக்கு 200 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்துள்ளோம்.
ஆனால் தற்போது 30 நாய்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதனால் நாய்கள் பிடிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இல்லை என்றால் அடுத்தது நாங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த சென்றுவிட்டால் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாது.
இதுவரை 156 நாய்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
எனக்கூறினார்.
மாநகராட்சி சுகாதார அலுவலர்கள்;
நாய்களை பிடிப்பவர்களை நாய்கள் கடித்து விடுகிறது.
மேலும் அவர்களுக்கு குறைந்த சம்பளம் இதனால் நாய் பிடிக்க வருவதற்கு தயங்குகின்றனர்.
அவர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கூறினர்.
சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் ;
அரசு மருத்துவமனைக்கு வரும்
நோயாளிகள் மற்றும்
அவர்களுடன் இருப்பவர்களின்
பாதுகாப்பை உறுதிபடுத்த
அங்கு கண்காணிப்பு கேமரா
பொறுத்த வேண்டும்.
இக்கூட்டத்திற்கு அரசு அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்தும் கூட்டத்திற்கு வராத அலுவலர்கள் மீது அந்த துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.
மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அலுவலர்கள் ஒருவர் கூட குறைகளை தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர்.
கடமைக்கு கூட்டத்திற்கு வராமல் மக்கள் குறைகளை தீர்க்க அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.
என பேசினார்.
7 தீர்மானங்கள்
மாநகராட்சியில் சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த மண்டலத்திற்கு ஒரு உணவு மையம் அமைக்க வேண்டும்.
நாய்களுகளுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டு மண்டலத்திற்கு ஒரு நாய் தங்குமிடம் அமைக்க வேண்டும்.
நாய்க்கு சிகிச்சை அளிப்பது குறித்து மாநகராட்சி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புற்று நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
மாநகராட்சி பொது சுகாதார குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மார்பக புற்றுநோய்
தடுப்பது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், கால்நடை பராமரிப்புதுறையினர் மற்றும் பொது சுகாதார குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
------------------------------------------------.