கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் விவசாயிகளுக்கு
பட்டறிவுப் பயணம்
ஓசூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய
பட்டறிவுப் பயணம்
50 விவசாயிகள் பங்கேற்பு
ஓசூர். மார்ச். 20. –
மண்புழு உரம் தயாரிப்பு
ஓசூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம்
மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்
திட்டத்தின் கீழ்
சொக்கநாதபுரம்,
கொத்தப்பள்ளி,
சேவகானப்பள்ளி,
கிராமத்தில் உள்ள 50 விவசாயிகளை ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய பட்டறிவுப் பயணத்திற்கு திண்டுக்கல்லில் உள்ள வேளாண் அறிவியல் மையத்துக்கு அமைத்துச் செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
பட்டறிவுப் பயணம்
இந்தப் பட்டறிவு பயணத்தில்
டாக்டர். செந்தில்குமார்
அவர்கள் பங்கேற்று
மண்புழு உரம் தயாரிப்பு குறித்து
விவசாயிகளுக்கு செயல்
விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
இயற்கையால் உழவனுக்கு படைக்கப்பட்ட ஒரு வரம் மண்புழு,
மண்புழு உரம் என்பது நிலத்தில் கிடைக்கக் கூடிய விவசாய மக்கும் கழிவுகளை சாணத்தோடு சேர்த்து மண்புழு மூலம் மக்க வைத்து கிடைக்க கூடிய உரமே மண்புழு உரமாகும்.
மண்புழு உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்
விவசாய கழிவுப் பொருட்கள்,
சாணம்,
மண்புழு,
ஆகியவை ஆகும்.
தயாரிக்கும் முறை
சாணம் மற்றும் விவசாய
கழிவுகளை
1:1 விகிதம் முதல் 1:3 விகிதம்
வரை கலந்து
மண்புழு உரப்படுக்கை
தயாரிக்க வேண்டும்.
மண்புழு உரப்படுக்கையை தினமும் நீர் தெளித்து
25 சதவீதம் ஈரப்பதத்தில் பராமரிக்க வேண்டும்.
உரப்படுக்கையை 15 நாட்களுக்கு ஒரு முறை திருப்பி விட வேண்டும்.
இதுபோல் 4 முதல் 5 முறை திருப்பி விட வேண்டும்.
மூன்று முதல் நான்கு முறை திருப்புதலுக்கு பிறகு மண்புழு உரப்படுக்கையின் ஈரப்பதத்தை
45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்த்தி நான்கு முதல் ஐந்து நாட்கள் பராமரிக்க வேண்டும்.
ஆப்ரிக்கன் மண்புழுக்கள்
பின்பு 6x1x1 மீட்டர் அளவு
மண்புழு உரப்படுக்கைக்கு
சுமார் 2.5கிலோ ஆப்ரிக்கன்
வகை மண்புழுக்களை படுக்கையில் விட வேண்டும்.
மண்புழு விட்ட பிறகு தினந்தோறும் நீர் தெளித்து
35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ஈரப்பதத்தில் மண்புழு உரப்படுக்கையை பராமரிக்க வேண்டும்.
ஐந்து நாட்கள் கழித்து மண்புழு உரப்படுக்கையின் மீது மண்புழு எச்சங்கள் குருணைகளாக உருவாக ஆரம்பிக்கும்.
இதை நாள்தோறும் நீர் தெளிப்புக்கு முன்
படுக்கையில் மேல்மட்டமாக கைகளால் மட்டும் சேகரித்து உரமாக பயன்படுத்தலாம்.
45 நாட்களுக்கு பிறகு
75 சதவீதம் மண்புழுக்களால் சிதைக்கப்பட்ட நிலையில்
நீரின் பதத்தை 25 சதவீதமாக குறைத்து மண்புழுக்களை மண்புழு உரப்படுக்கையில்
இருந்து பச்சை சாணம்
கொண்டு பிரித்து எடுக்க வேண்டும்.
பிரித்து எடுத்த மண்
புழுக்களை அப்படியே
அடுத்த தயார் நிலையில்
உள்ள பாதி மக்கிய கழிவுகள் கொண்ட மண்புழு உரப்படுக்கையில் விடவும்.
மண்புழு அதிகமாக இருக்கும் நிலையில் இரண்டாவது மண்புழு உரப்படுக்கையில் விடவும்.
இப்படியே நமது நிலத்திற்கு தேவையான மண்புழு உரத்தினை உற்பத்தி செய்யலாம்
சத்துக்கள் மற்றும் பயன்கள்
மண்புழு உரம்
பயன் படுத்துவதால்
தழை சத்து
1 முதல் 1.5 சதவீதமும்,
மணிச்சத்து
0.5 முதல் 0.8 சதவீதமும்,
சாம்பல் சத்து
0.4 முதல்
0.7 சதவீதமும்
மற்றும்
மண்ணின்
அமில காரத் தன்மையானது சரியான அளவாக
6.5 முதல் 7.5 சதவீதமாக கிடைக்கும்.
இதன் மூலம் நம் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.
நன்மை தரக்கூடிய
நுண்ணுயிரிகள் அதிக அளவில்
மண்ணில் உற்பத்தி ஆகும்.
நீர் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையை மண்ணில் அதிகப்படுத்துகிறது.
மண்புழு உரம் மற்ற மக்கு உரத்தினை விட களைகள் பிரச்சனையை குறைக்கிறது.
பொதுவாக ஒரு ஏக்கருக்கு
2 டன் மண்புழு உரம்
தனியாக இடவேண்டும்.
மற்ற செயற்கை உரங்களோடு
கலக்க கூடாது.
மேற்கண்ட செய்முறைகளின் படி மண்புழு உரத்தை தயாரிக்க தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், அலுவலகத்தில் மானியத்தில் வழங்கப்படுகிறது என
விவசாயிகளுக்கு கூறினார்.
மேலும் இப்பட்டறிவுப் பயணத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு
அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர்
சோ.சுகுணா
நன்றி கூறினார்.
இப்பட்டறிவுப்
பயணத்திற்கான
ஏற்பாடுகளை
உதவி தொழில்நுட்ப
மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.
-------------------------------------.