கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம்
செங்கமலவல்லி நாயகி உடனுறை
ஸ்ரீசென்னகேசவ பெருமாள் கோயிலில்
திருக்கல்யாண உற்சவ விழா
ஓசூர். ஜனவரி. 05. –
திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண உற்சவம்கெலமங்கலத்தில் பேரூராட்சியில்
அமைந்துள்ள ஸ்ரீசெங்கமலவல்லி நாயகி
உடனுறை ஸ்ரீசென்ன கேசவ பெருமாள்
கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வெகு சிறப்பாக நடந்தது.
ஸ்ரீசெங்கமலவல்லி நாயகி
உடனுறை ஸ்ரீசென்னகேசவ பெருமாள் கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீசெங்கமலவல்லி நாயகி
உடனுறை ஸ்ரீசென்னகேசவ பெருமாள் கோயிலில்
திருக்கல்யாண உற்சவ விழாவை முன்னிட்டு
காலையில் மூலவர் சென்னகேசவ பெருமாளுக்கு பல்லேறு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து
தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேளதாளத்துடன் சீர்வரிசை
ஊர்வலம்
அதைத் தொடர்ந்து சென்னகேசவ பெருமாள் சுவாமிக்கு சீர் வரிசை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பூ, தேங்காய், பழம், மஞ்சள் வளையல்,
கண்ணாடி உள்ளிட்டவை அடங்கிய சீர்வரிசையை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பெண் அழைப்பு, மாலை மாற்றுதல், நிகழ்வை தொடர்ந்து, வேதமந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி,
பூதேவி தாயார் உடனுறை ஸ்ரீசென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு
மகாமங்களாரத்தி நிகழ்வுக்கு பிறகு திருமணக்கோலத்தில் ஸ்ரீசென்ன கேசவ
பெருமாள் கோயில் வளாகத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா குழு
சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த திருக்கல்யாண உற்சவத்தில் கெலமங்கலம்,
தளி, தேன்கனிக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.