நெடுஞ்சாலைத்துறை,
நபார்டு மற்றும் கிராப்புற சாலை
மேப்பாட்டு திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனஹள்ளி முதல் அரியனப்பள்ளி வரை
ஆந்திர மாநில எல்லை வரை
ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பில்
தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். நவ. 30. –
வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம்,
ரூ.1 கோடியே 72 இலட்சம் மதிப்பில்
தார்சாலை பணி - பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம்,
வேப்பனஹள்ளி குப்பம் சாலையில்
நெடுஞ்சாலைத்துறை,
நபார்டு மற்றும் கிராப்புற சாலை
மேப்பாட்டு திட்டத்தின் கீழ்,
ரூ.1 கோடியே 72 இலட்சம் மதிப்பில்
தார்சாலை பணிகளுக்கு
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்
ஆகியோர் முன்னிலையில்
நவ. 30-ம் தேதியன்று பூமி பூஜை செய்து,
பணிகளை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் தலைமையிலான தமிழக அரசு
பொதுமக்கள், விவசாமிகள், மகளிர்
பயன்பெற கூடிய வகையில்,
சாலை வசதி,
குடிநீர் வசதி,
மின்சார வசதி,
போக்குவரத்து வசதி
என அடிப்படை கட்டமைப்பு வசதிகளை
ஏற்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், இன்று
வேப்பனஹள்ளி முதல்
அரியனப்பள்ளி சாலை 0/0 1/735 கி.மீ தூரத்திற்கு,
மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு
வழங்கப்படும் சிறப்பு உதவித் திட்டம்
2025 2026 கீழ், ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பில்,
ஊராட்சி ஒன்றிய சாலையை
இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்தி
மேம்பாடு செய்வதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இச்சாலை
வேப்பனஹள்ளியிலிருந்து அரியனப்பள்ளி வழியாக ஆத்திர மாநில எல்லையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பெங்களூர்,
ஓசூர்,
சூளகிரி,
பேரிகை,
அத்திமுகம்
போன்ற பகுதி மக்கள் ஆத்திர மாநிலம்
குப்பம் இரயில் நிலையம் மற்றும்
திருப்பதிக்கு செல்வ கூடியவர்கள்.
இந்த கிராம சாலையை அதிக அளவில் பயன்படுத்திகின்றனர்.
அதேபோல ஆந்திர மாநில எல்லையான
அரியனப்பள்ளி,
தனிகோட்டூர்,
கொங்கனப்பள்ளி கூட்டு சாலை
பகுதியில் விலையகூடிய
ராகி,
சிறுதானியங்கள்,
காய்கறிகள்
வேப்பனப்பள்ளி, சூளகிரி, ஒசூர் பகுதிகளுக்கு
நாள்தோறும் எடுத்துச் செல்லும் விவசாயிகளும்,
வேகமாக வளர்ந்து வரும் ஒசூர், சூளகிரி பகுதியில்
உள்ள தொழில் நிறுவனங்களுக்கு செல்லும்
தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ
மாணவியர்கள் சிரமமின்றி பயணம்
மேற்கொள்வதற்கு ஏதுவாக
நெடுஞ்சாலை துறை மூலம்
நபார்டு மற்றும் கிராமபுற சாலை
மேம்பாட்டு திட்டத்தின் கீழ்
இந்த சாலைப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், சாலைப்பணிகளை தரமாகவும்,
விரைவாகவும் முடித்து பொதுமக்களின்
பயன்பாட்டிற்கு வழங்க நெடுஞ்சாலை துறை
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு.பி.முருகன்,
நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர்
திரு.எஸ்.பாலகிருஷ்ணன்,
உதவி பொறியாளர்
திருமதி.ரேணுகா தேவி,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.குமரேசன்,
முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்
திரு.ரகுநாத்,
திரு.ஸ்ரீனிவாசன்,
திரு.கருணாகரன்,
திரு.ஜெயராமன்,
திரு.நாகேஷ்,
திரு.மாதேஸ்வரன்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
-------------------------------------------.