கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில்
மார்ச் 3-ம் தேதி தேர்த்திருவிழா அன்று
சந்திர கிரகணம் இருப்பதால்
அதிகாலை 5.30 மணிக்கு
தேரோட்டம் துவக்கப்பட்டு
மதியம் 1மணிக்குள் நிறைவு
ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்
ஒசூர், ஜன. 22:
அருள்மிகு சந்திரசூடேஸ்வரர்
மலைக்கோயில்
தேர்த்திருவிழா
ஆலோசனைக் கூட்டம்
ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில்
2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதியன்று
தேர் திருவிழா நடைபெற உள்ளது.
இது குறித்து
தேர்பேட்டையில் உள்ள
ஸ்ரீகல்யாண சூடேஸ்வரர் திருக்கோயிலில்
ஜனவரி 21-ம் தேதியன்று ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது.
தேர் கமிட்டி தலைவர்
திரு. கே.ஏ.மனோகரன். Ex.MLA.
தலைமையில் நடந்த
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
தேர் கமிட்டி,
ஊர் முக்கிய பிரமுகர்கள்,
செயல் அலுவலர்,
திருக்கோயில் தலைமை அர்ச்சகர்,
தேர்கவுண்டர்கள்.
ஆகியோர்
பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
இந்த ஆலோசனை கூட்டத்தில்
வருகின்ற 03.03.2026 செவ்வாய்கிழமை தேர்திருவிழா அன்று சந்திர கிரஹணம் நடைபெறுகிறது.
இதனால் வரும் 02.03.2026 திங்கள் கிழமை அன்று மாலை 06.30 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் தொடங்கப்படும்.
03.03.2026 செவ்வாய் கிழமை காலை 05.30 மணி முதல் தேரோட்டம் துவங்கப்பட்டு மதியம் 01.00 மணிக்குள் நிறைவு பெறும்.
சந்திர கிரஹணத்தை முன்னிட்டு
03.03.2026 அன்று மதியம் 01.30 மணிக்கு
திருக்கோயில்
மலைக்கோயில்
கீழ்கோயில்
நடை சாற்றப்படும்.
இரவு 09.30 மணிக்கு
கிரஹணசாந்தி நிறைவு பெற்று
கீழ்கோயில் மட்டும் நடை திறக்கப்பட்டு
பக்தர்கள் தரிசனத்திற்கு
அனுமதிக்கப்படுவார்கள்.
மலைக்கோயிலில்
03.03.2026 மாலையில் தரிசனத்திற்கு அனுமதியில்லை.
மீண்டும் மறுநாள் 04.03.2026 அன்று
காலை 04.00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்திருவிழா அன்று
அன்னதானம் வழங்குபவர்கள்
கிரஹணம் உள்ளதால்
மதியம் 01.00 மணிக்குள்
கொடுத்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
திரு. எம்.நாகராஜ்
திரு. என்.எஸ்.மாதேஸ்வரன்
திரு. எம்.சூடப்பா
திரு. எம்.முருகன்
திரு. க.சின்னசாமி
(செயல் அலுவலர்)
திரு. ச.வாச்சீஸ்வரன்
(தலைமை அர்ச்சகர்)
தேர்க்கவுண்டர்கள்
திரு. ராமமூர்த்தி
திரு. ஜெயதேவன்
திரு. சக்திவேல்
திரு. பாண்டியன்
திரு. ஜி.பாலு
திரு. பாலகிருஷ்ணன்
திரு. லோகநாதன்
திரு. அசோக்குமார்
திரு. பீ.கே.நாகராஜ்
திருக்கோயில் பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.
----------------------------------------.