கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
கவுன்சிலர்
பொது சுகாதாரக் குழு தலைவர்
N.S.மாதேஸ்வரன்
திமுக கட்சியின்
கலை, இலக்கியப் பகுத்தறிவு
பேரவை மாநில துணைச் செயலாளராக
நியமனம்
ஓசூர் எம்எல்ஏ.,விடம் வாழ்த்து
பெற்றார்.
ஓசூர். ஜுலை. 23. -
திமுக கட்சியின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை
மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள
ஓசூர் மாநகராட்சியில் திமுக கட்சியின்
22-வது வார்டு கவுன்சிலரும்,
மாநகர பொது சுகாதாரக்குழு
தலைவருமான
என்.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள்,
ஓசூர் எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்
அவர்களை சந்தித்து
பொன்னாடை, ஆளுயர மாலை அணிவித்து,
புத்தர் சிலை வழங்கி
வாழ்த்து பெற்றார்.
திமுக பொதுச்செயலாளர்
துரைமுருகன்
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தலைமைக் கழக அறிவிப்பு -
திமுக. கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணைச்செயலாளராக என்.எஸ்.மாதேஸ்வரன் (ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்) தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை நிர்வாகிகளுடன் இணைந்து இவர் கழகப் பணியாற்றுவார்.
என்று அறிவித்துள்ளார்.
ஓசூர் எம்எல்ஏ வாழ்த்து
அதைத்தொடர்ந்து
கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர்
எம்.எல்.ஏ., ஒய். பிரகாஷ்
அவர்களை,
என்.எஸ். மாதேஸ்வரன், நேரில் சென்று சந்தித்து, பொன்னாடை, ஆளுயர மாலை அணிவித்து, புத்தர் சிலை வழங்கி வாழ்த்து பெற்றார்.
அப்போது கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியினர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரைச் சேர்ந்த பிரபல திமுக பிரமுகரான
என்.எஸ்.மாதேஸ்வரன்,
கடந்த 25 ஆண்டுகளாக ஓசூர் பகுதியில் திமுக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார்.
இவர் 2001-ம் ஆண்டு முதல் திமுகவில் இணைந்து, ஓசூர் நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் கவுன்சிலராகவும்,
ஓசூர் நகராட்சியில்
இரண்டு முறை
நகராட்சி துணைத்தலைவராகவும்,
ஒரு முறை நகராட்சித்தலைவராகவும்
(பொறுப்பு), மற்றும்
மாநகராட்சியில்
பொது சுகாதாரக்குழுத்தலைவர்
என பல்வேறு பொறுப்புகளை ஏற்று
திறம்பட நிர்வகித்து, திமுக கட்சித் தலைமையிடமும்,
ஓசூர் பகுதி மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளார் என்றால் மிகையாகாது.
பொது சேவையில்...
என்.எஸ்.மாதேஸ்வரன்...
சுயேட்சையாக வெற்றி
2001-ம் ஆண்டு- ஓசூர் நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, கவுன்சிலர் மற்றும் நகராட்சி துணைத்தலைவராக பொறுப்பேற்றார்.
திமுகவில் இணைப்பு
அதே ஆண்டு திமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட
என்.எஸ்.மாதேஸ்வரன்,
ஓசூர் நகராட்சியில் இரண்டு முறை துணைத்தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.
2011-ம் ஆண்டு – ஓசூர் நகராட்சியின் (பொறுப்பு) தலைவராகவும் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார்.
2022-ம் ஆண்டு ஓசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் மாநகராட்சி தேர்தலில் 22-வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்று கவுன்சிலர் மற்றும் மாநகர பொது சுகாதாரக்குழு தலைவராக பொறுப்பேற்று,
சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
கட்சிப்பணியில்...
என்.எஸ்.மாதேஸ்வரன்...
இளைஞர் அணியின்
மாவட்ட துணை அமைப்பாளர்
2001-ம் ஆண்டு திமுக கட்சியில் இணைந்த என்.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக இளைஞர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டு கட்சிப்பணியாற்றி வந்தார்.
ஓசூர் திமுக நகரச்செயலாளர்.
2012- 2018 -ம் ஆண்டு வரை - ஓசூர் திமுக நகரச்செயலாளராக பணியாற்றினார். அப்போது திமுக நடத்திய பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் தலைமையேற்று நடத்தி உள்ளார். பல போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றும்,
தீவிர கட்சிப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஓசூர் பகுதியில் திமுகவின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வரும்
என்.எஸ். மாதேஸ்வரன்.
அவர்களின் கட்சிப்பணியை பாராட்டும் வகையில் தற்போது,
திமுக தலைமைக் கழகம் சார்பில்
திமுக. கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது,
அவருக்கு திமுக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பாராட்டுக்களும்,
வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
--------------------------------------.