ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
மலர் - 1. இதழ்கள் - 255a
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டாரத்தில்
வேளாண் வளர்ச்சிக்கான
பிரச்சார இயக்க முகாம்
ஓசூர் வட்டாரத்தில்
வேளாண் வளர்ச்சிக்கான
பிரச்சார இயக்க முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டாரத்தில்
வேளாண் வளர்ச்சிக்கான
பிரச்சார இயக்க முகாம்
ஓசூர். ஜுன். 7. –
ஒசூர் வட்டாரத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் கடந்த மே 29-ம் தேதி முதல் ஜுன் மாதம் 12-ம் தேதி வரை விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார இயக்க முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக
நேற்று
அச்செட்டிப்ள்ளி,
நாகொண்டப்பள்ளி,
எஸ்.முதுகானப்பள்ளி,
ஆகிய கிராமங்களில் பிரச்சார இயக்க முகாம் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மையத்தின் முனைவர்.
திரு.சுந்தர்ராஜ்,
கரும்பு இனப்பெருக்க நிறுவன
வேளாண் விஞ்ஞானி
டாக்டர்.சுரேஷ்,
உளவியல் தொழில்நுட்ப வல்லுநர்
திரு.குணசேகரன்,
தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லூர்
திரு.ரமேஷ்,
மனையியல் தொழில்நுட்ப வல்லுநர்
திருமதி.பூமதி,
வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி,
வேளாண்மை அலுவலர்
திருமதி.த.ரேணுகா,
மற்றும்
அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள்
ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் முக்கியத்துவம்
மற்றும்
முன்பருவ காரீப் பருவத்திற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள்
மற்றும்
மண்வள மேலாண்மை,
இயற்கை பண்ணையம்,
மத்திய, மாநில துறையின் மானியத்திட்டங்கள்,
குறித்து உரை ஆற்றினார்கள்.
இந்த பிரச்சார இயக்க முகாமில்
560 க்கும் மேற்பட்ட
விவசாயிகள் பங்கேற்றனர்.