தேன்கனிக்கோட்டை
கனகதாசர் 537-வது ஜெயந்தி விழா
கோலாகலம்
தலையில் தேங்காய் உடைத்து
பக்தர்கள் நேர்த்திக்கடன்
பாரம்பரிய நடனத்துடன்
கவியரசர் கனகதாசர்
கிராம தேவதைகளின் ஊர்வலம்
ஓசூர். டிச. 30. –
ஸ்ரீகனகஜோதி சேவா சங்கம்
மற்றும் குரும்பர் சங்கம்
தேன்கனிக்கோட்டையில்
ஸ்ரீகனகஜோதி
சேவா சங்கம் மற்றும்
குரும்பர் சங்கம் சார்பில்
537-வது கவியரசர் கனகதாசர்
ஜெயந்தி விழா
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கவியரசர் கனகதாசர் 537-வது
ஜெயந்தி விழா
கனகதாசர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில்
கவியரசர் கனகதாசர் சிலை
நகரின் பிரதான வீதிகளில்
மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக
கொண்டு வரப்பட்டது.
குரும்பர் சமூக மக்கள் தங்களது
குல தெய்வங்களான
ஸ்ரீசிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி
ஸ்ரீதொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி
ஸ்ரீலிங்கேஸ்வர சுவாமி
ஸ்ரீசிக்க வீரம்மா தேவி
உட்பட 30-க்கும் மேற்பட்ட
கிராமதேவதைகளை
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில்
டொல்லு குணிதா, வீரகாசே,
விரபத்ர குணிதா
ஆகிய பாரம்பரிய
நடனத்துடன் மேளதாளங்கள் முழங்க
நகரின் பிரதான வீதிகளில்
ஊர்வலமாக விழா மேடைக்கு
கொண்டு வந்தனர்.
பின்பு வரிசையாக எழுந்தருளிய
கிராம தேவதைகளுக்கு
சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
பக்தர்கள் தலையில்
தேங்காய் உடைத்து
நேர்த்திக்கடன் செலுத்தி
வழிபட்டனர்.
பொதுக்கூட்டம்
ஸ்ரீகனகஜோதி சேவா சமிதி
தலைவர் பாப்பண்ணா
கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு
தமிழ்நாடு மற்றும்
கர்நாடகா, ஆந்திரா
உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து
முக்கிய பிரமுகர்கள்
பங்கேற்ற சிறப்பு
பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீகனகஜோதி
சேவா சமிதி தலைவர்
பாப்பண்ணா
தலைமை வகித்தார்.
வழக்கறிஞர் ரவீந்திரநாத்,
கேடிஆர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவர் பாப்பண்ணா பேசியதாவது,
தமிழகத்தில் குரும்பர் இன மக்கள்
40 லட்சத்துக்கும் மேல் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்
2 லட்சத்து 50ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில்
குரும்பர் இன மக்களுக்கு
வெற்றி வாய்ப்புள்ள
6 சட்டப்பேரவை தொகுதிகளை
எந்த கட்சி வழங்க
முன்வருகிறதோ,
அந்த கட்சிக்கு தங்களுடைய
இன மக்களின்
வாக்குகள் அளிக்கப்படும்.
அதற்காக சமூதாய
தலைவர்களை ஒருங்கிணைத்து
பேச்சு வார்த்தை
நடத்தப்படும்.
இவ்வாறு அவர்
கூறினார்.
இதில் மார்க்கெட் மஞ்சு,
எல்லப்பா, வர்த்தூர் சுரேஷ்,
முனிகிருஷ்ணப்பா,
ஊராட்சிமன்ற
தலைவர் வெங்கட்ரமணப்பா,
எம்.எம்.முனிகிருஷ்ணப்பா,
முன்னாள் ஊராட்சிமன்ற
தலைவர் பீரப்பா,
ஓசூர் மாநகராட்சி
உறுப்பினர்கள் ரவி, சிவராமன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில்
மாற்றுத்திறனாளிகளுக்கு
மூன்று சக்கர வாகனங்கள்
மற்றும் ஊன்றுகோல்
ஆகியவை வழங்கப்பட்டது.
அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில்
தமிழகம் மற்றும் கர்நாடகா
உள்ளிட்ட பகுதிகளில்
இருந்து 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட குரும்பர் சங்கத்தினர்
கலந்து கொண்டனர்.