கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
திமுக சார்பில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பிறந்தநாள் - கபடி போட்டி
ஓசூரில்
மாநில அளவிலான கபடி போட்டி
ஆண்கள் அணி மற்றும்
பெண்கள் அணி - இரண்டிலும்
கரூர் முதலிடம்
பெற்று சாதனை
உணவுத்துறை அமைச்சர்
திரு. சக்கரபாணி
மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்,
ஒசூர் எம்எல்ஏ
திரு. ஒய். பிரகாஷ்,
ஓசூர் மாநகர மேயர்
திரு. எஸ்.ஏ. சத்யா
ஆகியோர் பங்கேற்பு
ஒசூர், டிச.1. -
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
திமுக சார்பில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பிறந்தநாள் - கபடி போட்டி
ஓசூர் மாநகராட்சியில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பிறந்தநாளை முன்னிட்டு நடந்த
மாநில அளவிலான கபடி போட்டியில்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த
ஆண்கள்அணி மற்றும்
பெண்கள் அணியினர்
முதலிடத்தை பெற்று சாதனை படைத்தனர்.
சென்னை அணி இரண்டாவது இடத்தையும்
திருச்சி, கன்னியாகுமாரி அணிகள்
3-ம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு
தமிழக உணவு மற்றும்
உணவுப் பொருட்கள் வழங்கல்துறை
அமைச்சர் சக்கரபாணி
வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
40 அணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு
மாநில அளவிலான கபடி போட்டி
நவம்பர் 28-ம் தேதி
வெள்ளிக்கிழமை தொடங்கி,
நவ.30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை
3 நாட்கள் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து
ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என
40 அணிகள் பங்கேற்றன.
நவ.30-ம் தேதியன்று இறுதிப் போட்டிகள்
நடைபெற்றது.
.
முதல்பரிசு ரூ.1.50 லட்சம்
இந்த கபடி போட்டியில்
திறமையாக விளையாடி முதலிடம் பெற்ற
கரூர் ஆண்கள் அணிக்கு
முதல் பரிசாக ரூ.1.50 லட்சம் பரிசுத்தொகையும்,
இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற
சென்னை ஆண்கள் அணிக்கு
ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும்,
3- வது இடத்தை பிடித்த
திருச்சி மற்றும் கன்னியாகுமரி
ஆண்கள் அணிகளுக்கு
தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா
நவ்30-ம் தேதி நடந்த பரிசளிப்பு விழாவில்
தமிழக உணவு மற்றும்
உணவுப் பொருள்கள் வழங்கல் துறை
அமைச்சர் சக்கரபாணி,
ஒசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்,
மேயர் எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் பங்கேற்று
வெற்றி பெற்ற அணிகளுக்கு
கோப்பைகள்,
சான்றிதழ்கள் மற்றும்
பரிசுத்தொகைகளை
வழங்கி பாராட்டினார்கள்.
மகளிர் அணி
அதேபோல மகளிர் அணி பிரிவில்
திறமையாக விளையாடி முதலிடம் பிடித்த
கரூர் மாவட்ட சேரன் மகளிர் அணிக்கு
முதல் பரிசும்,
அரியலூர் எதிர்நீச்சல் மகளிர் அணிக்கு
இரண்டாவது பரிசும்,
திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மகளிர் அணியினர் - 3-வது மற்றும் 4-வது பரிசுகளை பெற்றனர்.
இந்த 4 அணிகளுக்கும்
தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும்
சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற ஆண், பெண் வீரர்களுக்கு
ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை,
கேடயம் சான்றிதழ்கள்
ஆகியவற்றை வழங்கி
அமைச்சர் சக்கரபாணி
பேசியதாவது...
3 சதவிகித வேலை வாய்ப்பு
தமிழகத்தில் விளையாட்டுத்துறையில்
வெற்றி பெறும் வீரர்களுக்கு மாநில அளவில்
3 சதவிகித வேலை வாய்ப்புகளை வழங்கி
வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சமீபத்தில் 84 வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியவர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக அரசு படிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும்
வெற்றி பெறும் வீரர்களை கெளரவித்து வருகிறது.
முதல்வர் கோப்பை
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கி தமிழக முதல்வர் சிறப்பித்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை
முன்னிட்டு மாநில அளவிலான
கபடி விளையாட்டுப் போட்டிகள்
3 நாள்கள் நடத்தி வீரர்களுக்கு
பரிசுகளை வழங்கிய
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
திமுக செயலாளரும்,
ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ்,
ஓசூர் மாநகர மேயர் சத்யா
உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
அகில இந்திய அளவிலான
கபடி போட்டி
அடுத்த ஆண்டு ஜனவரி 8,9, 10 ஆகிய தேதிகளில்
அகில இந்திய அளவிலான கபடி போட்டி
திண்டுக்கல் மாவட்டம் சங்கரன்கோயிலில் நடைபெறுகிறது.
இதில்
முதல் பரிசு ரூ.10 லட்சம்
இரண்டாம் பரிசு ரூ.7 லட்சம்,
3 -ம் பரிசு ரூ.4 லட்சம்
என ஆண்கள் அணிக்கும்,
மகளிர் அணிக்கும் இரு பிரிவினருக்கும் வழங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விளையாட்டுப் போட்டியில்
முன்னாள் எம்எல்ஏ
திரு. முருகன்,
துணை மேயர்
திரு. ஆனந்தய்யா,
மாநில இளைஞரணி
துணை செயலாளர்
திரு. சீனிவாசன்,
பொறியாளர் அணி
மாநிலத் துணைச் செயலாளர்
திரு. ஞானசேகரன்,
இலக்கிய அணி
திரு. என்.எஸ். மாதேஸ்வரன்,
சிறுபான்மையினர் அணி
திரு. விஜயகுமார்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
திரு. எல்லோராமணி,
மாவட்ட அவைத் தலைவர்
திரு. யுவராஜ்,
பொருளாளர்
திரு. சுகுமாரன்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--------------------------------.