ஜோதி தமிழ்
இணையஇதழ்
Hosur News5
Hosur News5
கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர்
கோபிநாத் பிறந்தநாள் விழா
108 அடி உயரமுள்ள புதிய கம்பத்தில்
காங்கிரஸ் கொடி ஏற்றினார்.
ஓசூர். நவ. 20. –
by Jothi Ravisugumar
பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கே. கோபிநாத்
ஓசூரில் உள்ள தனது வீட்டில் நவம்பர் 19 -ம் தேதி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், எம்.பி. கோபிநாத்துக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
எம்.பி வீட்டுக்கு வருகை தந்த ஓசூர் மாநகர சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் எம்.பியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
50 பேருக்கு புதிய ரேசன் அட்டைகள்
பிறந்தநாளை முன்னிட்டு 50 குடும்பங்களுக்கு புதிய ரேசன் அட்டைகளை எம்.பி. கோபிநாத் வழங்கினார்.
இந்த பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மைஜா அக்பர், சின்னகுட்டப்பா, நீலகண்டன், சாதிக், டிவிஎஸ் நிறுவன தொழிலாளர்கள் சங்க தலைவர் குப்புசாமி, அவருடைய மகள் கவுன்சிலர் பாக்கியலட்சுமி,
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ரூ.6 லட்சம் மதிப்பில்
108 அடி உயர கொடி கம்பம்
எம்.பி. கோபிநாத் பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மைஜா அக்பர் தனது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பில் 108 அடி உயரமுள்ள புதிய கொடி கம்பம்
உருவாக்கி இருந்தார். இந்த கொடி கம்பம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை,
சீதாராம் நகர் பகுதியில் நிறுவப்பட்டு, எம்.பி. கோபிநாத் காங்கிரஸ் கொடியேற்றினார்.
இந்த கொடி ஏற்று நிகழ்வில் கிருஷ்ணகிரி
மாவட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஏகாம்பாவாணன், துரை,
யேசுதாஸ், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர்
முனிராஜ், கவுன்சிலர் இந்திராணி
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.