வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் - 2026
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
மேற்கொள்ள தங்களது வீடுகளுக்கு வருகை தரும்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு
முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வேண்டுகோள்.
ஓசூர். நவ. 4. –
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி,
பாகம் 38 -ல்,
வாக்காளர்கள்
திரு.மோகன்,
திருமதி.அமுதா,
திரு.அருண்,
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரட்டனப்பள்ளி ஊராட்சி, பாகம் எண் 15 -ல்
வாக்காளர்கள்
திரு.கிருஷ்ணமூர்த்தி,
திருமதி.காஞ்சனா
ஆகியோர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (04.11.2025) நேரில் பார்வையிட்டு,
வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கினார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்- 2026
நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒரு மாத காலம் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 09.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம்
சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் முன்னதாக அச்சிடப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவர்.
வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பெற்று படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து,
அதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட
புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம்
ஒப்படைக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது
03 முறை
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று இப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
புதிய வாக்காளர்களை சேர்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்
படிவம்-6 மற்றும்
சுய உறுதிமொழி படிவத்தை
(Annexure-IV)
சேகரிப்பர்.
இறந்தவர்கள்,
நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள்
மற்றும்
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள்
அடையாளம் காணப்படுவர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
கணக்கெடுப்பு காலத்தில் கணக்கெடுப்பு படிவம் தவிர வேற எந்த ஆவணத்தையும் வாக்காளரிடம் இருந்து சேகரிக்க தேவையில்லை.
கணக்கெடுப்பு படிவங்கள் கையொப்பமிட்டு அளித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் தேதியினை சம்மந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் முன்பே தகவல் தெரிவிக்கப்படும்.
வாக்காளரால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை கையொப்பமிட்டு தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள காலத்திற்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
https://www.voters.eci.gov.in
என்ற இணையதளத்தின் வாயிலாகவும் கணக்கீட்டு படிவத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே
வாக்காளர்கள் தங்களது வீடுகளுக்கு
நேரடியாக வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
திரு.ஷாஜகான்,
வட்டாட்சியர்கள்
திரு.ரமேஷ் (கிருஷ்ணகிரி),
திரு.சின்னசாமி (பர்கூர்)
மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
-------------------------------.