மரக்கன்று நடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் பேரூராட்சி
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில்
மரக்கன்றுகள் நடும் விழா -
மரம் நம் வரம்
என்ற தலைப்பில் விழிப்புணர்வு -
வட்டார மருத்துவ அலுவலர்
டாக்டர். ராஜேஷ்குமார்,
பங்கேற்பு
ஓசூர். நவ. 25. –
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகாடமியில்
மரக்கன்று நடும் விழா
கெலமங்கலம் பேரூராட்சியில் இயங்கி வரும்
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில்
நவம்பர் 25-ம் தேதியன்று
மரக்கன்றுகள் நடும் விழா
சிறப்பாக நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு
பள்ளி முதல்வர்
திரு. வினோத்குமார்
தலைமை வகித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய
வட்டார மருத்துவ அலுவலர்
டாக்டர். ராஜேஷ்குமார்,
வட்டார கண்காணிப்பாளர்
முனைவர் ராஜா,
சுகாதார ஆய்வாளர்
திரு. சிவகுருநாதன்
ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரை ஆற்றினார்கள்.
மரம் வளர்த்தால் அடுத்த தலைமுறை
நன்றாக வாழ முடியும்.
மக்களுக்கு நல்ல காற்று,
நல்ல இயற்கை சூழல் கிடைக்கும்
என்று பேசினார்கள்.
தொடர்ந்து... பள்ளி வளாகத்தில்
வேம்பு,
பூவரசு,
புங்கன்,
அத்தி,
அரசு,
நாவல்,
ஆலமரம்,
உள்ளிட்ட பல்வேறு நிழல்தரும் மரங்களின் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மரம் நம் வரம்
இந்த விழாவில் மரம் நம் வரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் மரங்களின் பயன்களையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் மாணவர்களின் கரங்களே அதற்கு சான்றாக இருந்தது.
உறுதி மொழி ஏற்பு
மாணவ, மாணவிகளின் கரங்களில் இருந்த
மரக்கன்றுகள் நாளைய வளங்கள்
என்று சொல்லும் வகையில் இருந்தது.
எதிர்கால சந்ததிக்கு இயற்கையின்
கொடையான மரங்களை வளர்ப்பதற்கு
உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
சமுதாய நலன்
ஒவ்வொரு மாணவர்களும்
ஆர்வத்தோடும் சமுதாய நலன் கருதியும்
பங்கேற்றதை...
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
உரக்கச்சொல்வதாக இருந்தது.
இதில் பெற்றோர் பங்களிப்பும்
வருங்கால இளைய சந்ததியை
நற்காரியங்களுக்கு
ஊக்குவிக்கும் விதமாகவும்
உதவி செய்யும் விதமாகவும் இருந்தது.
நன்றி உரை
விழாவின் இறுதியில்
பள்ளியின் பொருளாளர்
திரு.சௌந்தர்ராஜன்
அவர்கள் நன்றி உரையாற்றினார்.
விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.