மனிதனால் அழிந்துவரும் வன விலங்குகளைப் பாதுகாத்து,
இயற்கைச் சமநிலையைப் பேணவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்
உலகக் காட்டுயிர் தினம்.
மார்ச் – 3 - உலகக் காட்டுயிர் நாள்
2025 Theme
“மக்களிடையே காட்டுயிர்கள் பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை முதலீடு செய்தல்”
"Wildlife Conservation Finance: Investing in People and Planet"
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 3. –
உலகக் காட்டுயிர் நாள்
(World Wildlife Day)
அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
ரிசார்ட்டுகளாக
மாறும் காடுகள்
நீரும்,
நிலமும்,
காற்றும்,
ஆகாயமும்,
ஏன் அண்டவெளியும்,
எனக்கானது,
என்னுடையது,
என்ற மனிதனின் குறுகிய எண்ணம்தான் காடுகள்
ரிசார்ட்டுகளாக மாறவும்,
யானைகளின் வழித்தடத்தை
ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டவும், வன உயிர்களை மருந்துக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும் வேட்டையாடவும் அவனுக்கு முட்டாள்தனமான துணிச்சலைத் தந்திருக்கிறது.
வன உயிர் ஆர்வலர்கள்
'முட்டாள்தனம்' என்பது சற்றே தடிமனான வார்த்தையாகக் கூடத் தெரியலாம். ஆனால், வன உயிர் ஆர்வலர்கள் மனிதனின் இந்தப் போக்கை 'முட்டாள்தனம்' என்றுதான் வரையறுக்கின்றனர்.
நான் மனிதன் என்ற ஆதிக்க சிந்தனையாலேயே வனங்கள் அழிகின்றன என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
மனிதனின் ஆதிக்கத்தால் வன உயிரினங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு அலைகின்றன என வருந்துகின்றனர்.
இந்த வருத்தத்துக்கு, அக்கறைக்கு ஒரு சர்வதேச வடிவம் கொடுக்கப்பட்டது.
மனிதனால் அழிந்துவரும் வன விலங்குகளைக் காக்கவும், இயற்கைச் சமநிலையைப் பேணவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சர்வதேச வன விலங்குகள் தினம் (மார்ச் 3) கடைபிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை
2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.
கருப்பொருள்
• 2024: "பூமி கோளில் உள்ள மக்களை இணைத்து: வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்தல்". "Connecting People and Planet: Exploring Digital Innovation in Wildlife Conservation".
• 2023:” வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டாண்மை” Partnerships for wildlife conservation
• 2022: "சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கான முக்கிய உயிரினங்களை மீட்டெடுப்பது"
• 2021: "காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்கள் மற்றும் பூமி கோளை நிலைநிறுத்துதல்."
• 2020: "பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் தாங்குதல்"
• 2019: தண்ணீருக்கு கீழே உள்ள வாழ்க்கை: மக்களுக்கும் கிரகத்திற்கும்.
• 2018: "பெரும் பூனைகள்: அச்சுறுத்தலில் இரைக்கொல்லிகள்"
• 2017: "இளம் குரல்களைக் கேளுங்கள்".
• 2016: "காட்டுயிர்களின் எதிர்காலம் எங்கள் கைகளில்"
• 2015: "காட்டுயிர் குற்றம் பற்றி தீவிரம் பெற இதுவே நேரம்".
------------------------------------------------.