ஓசூர் மாநகராட்சியில்
ரூ.100 கோடி மதிப்பில்
ஆறு மாடி கட்டடம்
419 படுக்கை வசதிகளுடன்
அரசு தலைமை மருத்துவமனை திறப்பு
மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக
ஓசூர் அரசு மருத்துவமனையை
மாவட்ட தலைமை மருத்துவமனையாக
தரம் உயர்த்தி கட்டப்பட்டுள்ள
புதிய மருத்துவமனைக் கட்டடத்தை
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து,
காணொளிக்காட்சி வாயிலாக,
திறந்து வைத்தார்.
ஒசூர். பிப். 16. -
மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை
ஒசூர் மாநகராட்சியில் மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக,
ரூ.100 கோடி மதிப்பில்
ஓசூர் அரசு மருத்துவமனையை
மாவட்ட தலைமை மருத்துவமனையாக
தரம் உயர்த்தி தரை மற்றும்
ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள
புதிய மருத்துவமனைக் கட்டடத்தை
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
அவர்கள்
(16.02.2026), சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக்காட்சி வாயிலாக, திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து,
ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள
ஓசூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையில்,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.கே.கோபிநாத்,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
ஒசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
ஆகியோர் (16.02.2026) குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய மருத்துவமனை கட்டிடத்தை பார்வையிட்டனர்.
தேசிய சுகாதார குழுமம்
திட்டம்(NHM)
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் அரசு மருத்துவமனையை
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக
தரம் உயர்த்த தேசிய சுகாதார குழுமம் (NHM)
திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி மதிப்பீட்டில்
கட்டடம் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
இப்பணிக்காக நாளிகபெட்ட அக்ரஹாரம் கிராமத்தில்
ஒசூர் - ராயகோட்டை சாலையில்
நில அளவை எண்:20/2 மற்றும்
பிற எண்கள் கொண்ட 6.02 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
இக்கட்டடங்களுக்கு 18.01.2024 அன்று
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு
15.03.2024 அன்று கட்டட பணிகள் துவங்கப்பட்டு
தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
அரசு தலைமை மருத்துவமனை கட்டடம்
419 படுக்கை வசதிகளுடன்
மொத்தமாக 22,395.45 சதுர மீட்டர்
(2,41,064 சதுர அடி) பரப்பளவில் கட்டங்கள்
கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை கட்டடம்
தரைதளம் முதல் ஆறு தளம் (G+6) வரை
20,166.60 சதுர மீட்டர்
(2,17,071 சதுர அடி)
பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் 1,327 சதுர மீட்டர் பரப்பில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் சமையல் கூடம், மத்திய கிருமி நீக்க பிரிவு (CSSD), மருந்து கிடங்கு மற்றும் பணியாளர் ஓய்வு அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும்
காச நோய்,
தொழு நோய் பிரிவு,
சலவை அரங்கம்,
பிணவறை,
மருத்துவ கழிவுகள்
மற்றும்
சிற்றுண்டியகம்
ஆகியவை தனித்தனி கட்டடங்களாக
கட்டி முடிக்கப்பட்டு,
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஒசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர்,
ஒசூர் அரசு மருத்துவமனையில்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
சார்பாக,
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ்
(TN RIGHTS),
ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில்
அமைக்கப்பட்டுள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கான
விழுதுகள் ஒருங்கிணைந்த
சேவை மையத்தில்
குத்து விளக்கு ஏற்றி வைத்து
ஒருங்கிணைந்த சேவை மையத்தினை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில்,
ஒசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.ஆனந்தைய்யா,
இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்)
மரு.மோகனபானு,
பொதுப்பணித்துறை
செயற்பொறியாளர்
திரு.செந்தில் குமார்,
ஒசூர் கூடுதல் காவல்
கண்காணிப்பாளர்
திரு.அக்ஷய் அனில் வாகாரே இ.கா.ப.,
மாற்றுத்திறனாளிகள்
நல அலுவலர்
திரு.முருகேசன்,
உதவி செயற்பொறியாளர்கள்
திரு.ஸ்ரீதர்,
திரு.சரவணன்,
திரு.சந்தோஷ் குமார்,
முதன்மை மருத்துவ அலுவலர்கள்
மரு.லட்சுமி ஸ்ரீ,
மரு.புவனா ஜெயபால்,
மாநகர சுகாதாரக்குழு தலைவர்
திரு.N.S. மாதேஸ்வரன்,
மண்டல குழு தலைவர்கள்
திரு.ரவி,
திரு.சென்னீரப்பா,
வட்டாட்சியர்
திரு.குணசிவா
மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,
மருத்துவர்கள், செவிலியர்கள்
கலந்து கொண்டனர்.
----------------------------------------.