பெண்களுக்கான ஒருங்கிணைந்த
சேவை மையம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்,
சமூக நலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறை சார்பில்,
பெண்களுக்கான ஒருங்கிணைந்த
சேவை மையம் திறப்பு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். டிச. 17. –
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை
ஒசூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்,
சமூக நலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறை சார்பில்,
பெண்களுக்கான ஒருங்கிணைந்த
சேவை மையத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் டிசம்பர் 17-ம் தேதியன்று
குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
ஒருங்கிணைந்த சேவை மையம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒரு
முன்னெடுப்பாகும்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு உடனடி சேவை
வழங்குவதே இதன் நோக்கமாகும்.
குடும்பம் மற்றும் பொது இடங்களில்
வன்முறையால் பாதிக்கப்படும்
பெண்களுக்கு தேவைப்படும்
அவசரகால மீட்பு,
மருத்துவ உதவி,
மனநல ஆலோசனை,
காவல் உதவி,
சட்ட உதவி,
தற்காலிக தங்குமிடம்
ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க
ஒன்றிய அரசின் மூலம்
பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டு அமைச்சகத்தின்
மிஷன் சக்தி திட்டத்தின் கீழ்
ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC),
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்
மருத்துவமனை வளாகத்தில்
செப்டம்பர் 2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது,
தளி,
கெலமங்கலம்,
ஓசூர்,
சூளகிரி
வட்டாரங்களை சேர்ந்த பெண்கள்
பயன்பெறும் வகையில்,
ஓசூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்
இன்று புதியதாக
ஒருங்கிணைந்த சேவை மையம்
துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே,
பெண்கள் உதவி எண் 181
மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட சமூகநல அலுவலர்
திருமதி.இரா.சக்தி சுபாசினி,
முதன்மை மருத்துவ அலுவலர்
மரு.லட்சுமிஸ்ரீ,
ஓசூர் அனைத்து மகளிர் காவல்
நிலைய காவல் ஆய்வாளர்
திருமதி.பங்கஜம்,
வட்டாட்சியர்
திரு.குணசிவா,
மிஷன் சக்தி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திருமதி.ராகவி,
மீரா பல்நோக்கு மருத்துவமனை
நிர்வாக இயக்குநர்
திருமதி.அம்பிகா பாரி,
ஆராதனா சமூக சேவை மற்றும்
திறன் மேம்பாட்டு
தொண்டு நிறுவன இயக்குநர்
திருமதி.ராதா,
துளசி தொண்டு நிறுவன இயக்குநர்
திரு.பாலகுமரன்,
அபலா தொண்டு நிறுவன பிரதிநிதிகள்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------.