10 தலைமுறை கண்ட
பெருமைக்குரிய மூதாட்டிக்கு
105-வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
மதகொண்டப்பள்ளியில்
பத்து தலைமுறைகளைக் கண்ட
குரு பசவம்மா அவர்களுக்கு
105-வது பிறந்தநாள் விழா
ஆசிபெற்றுச் சென்ற
வீர சைவ லிங்காயத்
சமூக மடாதிபதிகள்,
அரசியல் பிரமுகர்கள் மற்றும்
தொழிலதிபர்கள்
ஓசூர். டிச. 15. –
10 தலைமுறைகளை கண்ட
105 வயது மூதாட்டிக்கு
பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தில் 10 தலைமுறைகளை கண்ட
105 வயது மூதாட்டிக்கு
அவரது மகன்களும் மகள்களும், பேரக்குழந்தைகளும் மற்றும்
மடாதிபதிகள்,
அரசியல் தலைவர்கள்,
ஊர் மக்கள்
உள்ளிட்ட பலர் ஒன்று திரண்டு
பிறந்தநாள் விழா கொண்டாடிய
சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதகொண்டப்பள்ளி
கிராமத்தைச் சேர்ந்தவர் சி. எம். கவுடா.
இவர் செங்கல் தயாரிப்பு,
தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு மூன்று மூத்த சகோதரர்கள்
மற்றும் இரண்டு இளைய சகோதரிகளுடன், 105 வயதான தாயார் குரு பசவம்மாவுடன்
கூட்டுக் குடும்பமாக அதே பகுதியில் வசித்து வருகிறார்.
கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட
வீர சைவ லிங்காயத் சமூகத்தை சேர்ந்த
தாயார் திருமதி குருபசவம்மா
டிச.14-ம் தேதியன்று
105 வயது எட்டியதை அடுத்து
அவருக்கு அவரது மகன்கள் மற்றும்
மகள்கள் பேரன்மார்களுடன்
பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக
கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு
மழலை கவி மடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ. மகா ஸ்வாமிஜிகள்
தலைமை வகித்தார்.
ராஜாபுரம் சமஸ்தான மடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரா சுவாமிஜிகள்,
அஞ்செட்டி அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நூரோந்து சாமிமலை
மடாதிபதி சதாசிவ சுவாமிஜிகள்
மற்றும் பல மடாதிபதிகள் கலந்து கொண்டார்கள்.
பிறந்தநாள் விழாவில்
நூரோந்து சாமி மலை
மடாதிபதி சதாசிவ சுவாமிஜி
பேசியதாவது,
குரு பசவம்மா கொண்டாடும்
105 வது பிறந்தநாள் என்பது வாழ்க்கையில் எளிதானதல்ல.
அவர் மிகவும் கஷ்டப்பட்டு
இந்த 105 வயது அடைந்திருக்கிறார்.
அந்த காலத்து உணவு மற்றும்
பழக்க வழக்கமே இவரை
இந்த நிலைக்கு அடைய உதவியுள்ளது.
இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில்
அவருக்கு கடவுள் ஆசிர்வாதம்
சதா சர்வ காலமும் கிடைக்கட்டும்.
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
என்று திருக்குறனின் வாக்குகிற்கு
இணங்க அனைத்திற்கும் முழு முதல்,
தாய் தான் முதல் தெய்வம்
என்பதும் அவருக்கு செய்யப்படும்
சேவை தான் சிறந்தது.
அவர் மேலும் நீண்ட ஆயுளுடன்
மகன்கள் மற்றும் மகள்களுடன்
வாழ ஆண்டவனை
வேண்டுவதாக தெரிவித்தார்.
மகன் சிஎம் கவுடா
பேசியதாவது...
சிறுவயதில் மிகவும் கடின உழைப்பால்
தங்களை காப்பாற்றி கல்வி கற்க செய்து
தற்பொழுது நல்ல நிலையில்
இருப்பதற்கு
தயாரின் ஆசிகள் தான் காரணம்.
மேலும் 10 தலைமுறைகளை
கடந்து உடன் பிறந்த சகோதர
சகோதரிகளுடன் எங்களது கிராமத்தில்
ஒற்றுமையாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை
வாழ்ந்து வருவதாகவும்,
105 வயதிலும் தனது வேலைகளை
தானே பார்த்துக் கொள்வதுடன்
நல்ல உடல் நலத்துடன்
தங்களுடன் வாழ்ந்து வரும்
தாயாருக்கு பிறந்தநாள் விழா
கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி
அளிப்பதுடன்,
மேலும் அவருக்கு ஆண்டவன்
நல்ல ஆயுளை தர வேண்டும்
என பிரார்த்திப்பதாக...
அவரது நான்காவது மகன் சிஎம் கவுடா தெரிவித்தார்.
ஆசி வழங்கிய மூதாட்டி
இந்த விழாவில்
சுமார் 2000-க்கும் மேற்பட்ட உறவினர்கள்
மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
கலந்து கொண்டு
மூதாட்டி இடம் ஆசி பெற்று மகிழ்ந்தனர்.
இருமாநில
மடாதிபதிகள் வருகை
இந்த விழாவிற்கு
கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில்
இருந்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த
பத்துக்கும் மேற்பட்ட மடாதிபதிகள் வந்திருந்து,
மூதாட்டி இடம் ஆசி பெற்று
வாழ்த்தி பேசினார்கள்.
அரசியல் தலைவர்கள்
தொழிலதிபர்கள்
அதேபோல
அதிமுக முன்னாள் அமைச்சர்
திரு. பாலகிருஷ்ணா ரெட்டி,
பிஜேபி முன்னாள் மாவட்ட தலைவர்
திரு. எம். நாகராஜ்.
என்னகரம் ஊராட்சி
முன்னாள் தலைவர்
திரு. மகேஷ்
உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் வந்திருந்து
குருபசவம்மாவிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற
அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
----------------------------------------.