கிருஷ்ணகிரி மாவட்டம்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் – 2026
கணக்கெடுக்கும் பணி
நவ.4- ம் தேதி முதல் டிச. 4-ம் தேதி வரை
ஒரு மாதம் நடக்கிறது.
மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார்.இ.ஆ.ப,.
அவர்கள் தகவல்
ஓசூர். நவ. 4. –
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர
திருத்தம் – 2026
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 முன்னிட்டு நவ.4-ம் தேதி முதல் வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி
5 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல் கட்டம்
வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள்
2025 நவம்பர் 4-ம் தேதி முதல்
டிசம்பர் 4-ம் தேதி வரை
ஒரு மாதகாலம்
நடைபெற உள்ளது.
இரண்டாவது கட்டம்
வரைவு வாக்காளர் பட்டியல்
2025 டிசம்பர் 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்படுகிறது.
மூன்றாவது கட்டம்
பெயர்களை சேர்த்தல் மற்றும்
மறுப்பு தெரிவித்தல்
ஆகிய பணிகள்
2025 டிசம்பர் 9-ம் தேதி முதல்
2026 ஜனவரி 8 –ம் தேதி வரை
நடைபெறுகிறது.
நான்காவது கட்டம்
அறிவிப்பு காலம் விசாரணை மற்றும்
சரி பார்த்தல்
2025 டிசம்பர் 9-ம் தேதி முதல்
2026 ஜனவரி 31-ம் தேதி வரை
நடைபெறுகிறது.
ஐந்தாவது கட்டம்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடல்
2026 பிப்ரவரி 7-ம் தேதி சனிக்கிழமை அன்று
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இவ்வாறு
மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார்.இ.ஆ.ப,.
அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-------------------------------.