கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
10, 12வது வகுப்பு பொதுத்தேர்வில்
முதல் மூன்று இடங்களை பிடித்த
80 மாணவ மாணவிகளுக்கு
பரிசுகள் வழங்கி பாராட்டு
மேயர் S.A.சத்யா பங்கேற்பு
ஓசூர். ஜுன். 26. -
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில்
10, 12வது வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில்
உயர்நிலைப்பள்ளி மற்றும்
மேல்நிலைப் பள்ளிகள், மொத்தம் 14 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் 10, 12 - வது வகுப்புகளில்
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி
இந்த ஆண்டு முதல் முறையாக
நடைபெற்றது.
மேயர் S.A.சத்யா
ஓசூர் மாநகராட்சி அரங்கில்
ஜுன். 26-ம் தேதியன்று நடந்த இந்த நிகழ்ச்சியில்
மேயர் S.A.சத்யா பங்கேற்று
மாணவ, மாணவிகளுக்கு
சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில்
80 மாணவ, மாணவிகளுக்கு கை கடிகாரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
துணை மேயர்
ஆனந்தய்யா,
ஆணையாளர்
மாரிசெல்வி,
பொது சுகாதாரக் குழு தலைவர்
மாதேஸ்வரன்,
கல்வி குழு தலைவர்
ஸ்ரீதர்,
ஆகியோர் பங்கேற்னர்.
முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர், மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------.